உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பின்னிணைப்பு

303

உருசிய நாட்டுக் கிரெம்ளின் மாளிகையில் அமைந்துள்ள அணுத்துளையாச் சுரங்கப் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ள அருநூல்களுள் ஒன்று திருக்குறள் ஆகும்.

விக்டோரியாப் பேரரசியார் தம் மறை நூலைப் போலப் போற்றி வைத்திருந்த நூல் திருக்குறள். காலையில் கண் விழித்ததும் கற்கும் நூலாகத் திருக்குறளைக் கொண்டு இருந்தார் என்பது அவரது பெருநிலைச் சான்றாவதுடன் திருக்குறளின் பெருமைச் சான்றுமாகும்.

இங்கிலாந்து நாட்டுக் காட்சிச்சாலையில் விவிலியத்துடன் வைத்துப் போற்றப்படும் திருநூல் திருக்குறள் ஆகும் என்பர்.

திருக்குறளால் தோன்றிய நூலகம்

L

தஞ்சைப் பகுதியை ஆட்சி செய்த சரபோசி மன்னர் ஒரு முறை காசிக்குச் சென்றார். அப்படியே கல்கத்தாவில் இருந்த அரசப் பேராளரைக் கண்டு மகிழ்ந்தார். அரசப் பேராளர் திருக்குறளை ஆங்கில மொழிபெயர்ப்பு வழியாகக் கற்றிருந்தவர். அதனால் தமிழ்ப் பகுதியில் ஆட்சி நடத்தும் சரபோசியின் வழியே திருக்குறளைப் பற்றி அறிய விரும்பினார். அதுவரை அதைப் பற்றி அறியாதிருந்த சரபோசி, “நான் ஊர் போய்ச் சேர்ந்ததும் அப்புத்தகத்தை அனுப்பி வைக்கிறேன்” என்று விடை பெற்றுக் கொண்டார். அதன் பின்னரே தமிழ்ச் சுவடிகளைத் தொகுக்கத் தொடங்கினார். ‘சரசுவதி மால்' என்னும் கலைக் கருவூலம் தோன்றுவதற்கு மூலமாக இருந்தது இத்தூண்டலே யாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/328&oldid=1579954" இலிருந்து மீள்விக்கப்பட்டது