உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.

5.

6.

7.

8.

9.

  • பாமணிக் கோவை

107

நீங்கும்; திறமும் வகையும்; தெரியாது - பிறர்க்குத் தெரியாது; எறியும் - வீசித் தரையில் அடிக்கும்.

— -

இயை - உவமையாய்ப் பொருந்துகின்ற; அழியாது - நிலை மாறாமல்; வழியா விழும் - வழிந்து விழுகின்ற; பழியேம் - தூற்றாமல் போற்றுவேம்; இனியோ ஒகாரம் எதிர்மறை; இனியோ பருகல் இனிமேலா சுவைத்தல்/ இனிக்கேட்டல் இயலாது என்றபடி; தேன் வளர்மொழி என்றமையால் 'பருகல்' என்றார்.

படும் - பொழியும்; எயிலார் புறவத்து இணையார் - மதில் சூழ்ந்த இடத்தில் இருக்கும் வீரர்; பழி ஆர் பிரிவு - சூறை பொருந்திய குறைவு.

மறையோர் - வேதம் வல்லவர்; நிறை - மனநிறைவு; நிரைப்பாய்- வரிசையாய் முறைப்படுத்திச் சொல்லுவாய்; 'இறையே பிரிய இரேன் நான் எனும்' என்று தொடர் கொள்க.

-

கரவோ அறியாய் - வஞ்சனை அறியாதவரே; பிரியாய் - பிரியாதவரே; உரவோய் - அறிவு உடையவரே; பிரிதல் -இப்போது மறைதல்; கரவோ உரையாய் வஞ்சனையோ சொல்லாய்; அரவு ஏர் - பாம்பு சூடிய அழகினையுடைய; விரவும் திறம் - மீண்டும் கலக்கும் வகை; ஓகாரம் அசை. கடலும் பாறையும் மலரும் மரமும் உருகும் என்பது இச் செய்யுளில் வரு கின்றது. கரைதல் - ஒலித்து அழுதல்; மடல் - இதழ்; மலர்க் கண்- மலர் - போன்ற கண்; மிடல் - வலிமை; அடல் ஏறு - கொல்லேறு; ஏறு - எருது.

மகனை தோன்றிய புதல்வரை; ஒருவர் - நீங்கி; பெருமா - பெருமானே; பிரியப் பெறுமோ - பிரிதலாகுமோ..

10. கழியாத் துயரம் - நீக்க முடியாத துன்பம்; அழியாப் புகழ் என் அனை - சிவநெறி பரவச் செய்த தலைவர்க்கு மனைவியாய் அமையும் பேறு பெற்ற என் அன்னை; ஆதலின், அழியாப் புகழுடையார் என்று சிறப்பித்தார்; ஒழியாய் நீக்குவாயாக!

-

இச் செய்யுள் தேவபாடாண்டிணைக்கண் வந்த காஞ்சித் திணைத் தாபதநிலை; ஆசிரியர், அன்னையார் துயரப் படுகின்ற வகையை உணர்ந்து சங்காலக் கபிலரைப் போலத் தாம் வருந்திக் கூறுதல்; பேகனால் துறக்கப்பட்ட கண்ணகியின் வருத்தத்தைக் கூறும் செய்யுளில் கபிலர்,

"இகுத்த கண்ணீர் நிறுத்தல் சொல்லாள்

சூழல் இணைவது போல் அழுதனன் பெரிதே

(புறநா. 143) மன்னைக் காஞ்சி - கழிந்ததனால் உண்டான உலக நிலையாமையைக் கூறி இரங்கி வருந்ததுதல்

வாங்கு கடல் - வளைந்த கடல்; குழிய - குழி போலத் தோன்றும்; சுருங்க’ என்னும் பொருட்டு. உரறி - இடித்து; மழைக் குலம் மேகக்கூட்டம்; அரும்பொருள் - அரிய கருத்துக்கள்; காட்டி - மேற்கோள் காட்டி; உவலைச் சமயிகள் - கருத்து வலிவற்ற அகப்புறச் சமயத்தார்கள்; மெய் - உண்மை; கிளர - விளங்கித் தோன்ற; உரை முறை நிறுத்தனை தருக்கத்தோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/140&oldid=1580097" இலிருந்து மீள்விக்கப்பட்டது