உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருதினமையால், 'உயிரே' என்றார். உயிரினும் மேம்பட்ட 'குற்றமற்ற உணர்வே' எனவும், (செயிர்

குற்றம்) உணர்வுக்கும் உணர்வாக விளங்கும் குருவே என்னுங் கருத்தில் உணர்வுக்குணர்வே' எனவும் ஏனைய எல்லாவற்றிற்கும் இணையில்லா முதன்மையாய் விளங்குதலின் 'ஒப்பிலா முதலே' எனவும், (முதல் - முதன்மை) ஆசிரியர் கூறினார் உலக நிலையாமையும் உண்மையும் கருதுதலுக்கு மேற்பட்டுப், பிரிவுத் துன்பத்தில் சிந்தை மயங்குதலால், 'அறிவோடு கூடாச் சிறியேம்' என்றார் பரிவொடு - அன்பொடு; களைமதி - களைக; மதி ; அசை; வேண்டுவலே - வேண்டுவனே; ஏகாரம் - இரக்கம்; 'சிறியேம் உறுதுயர் களைக என நின் திருவடி நினைந்து ஒரு வரம் வேண்டுவல்' என்று தம் துயர் மிகுதியை ஆசிரியர், இப் பகுதியிற் கூறி வேண்டுகின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/142&oldid=1580099" இலிருந்து மீள்விக்கப்பட்டது