உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

❖ - 11❖ மறைமலையம் – 11

உற

4. திரு மதுரைநாயகம் பிள்ளை அவர்கள் வரலாற்றுச் சுருக்கம்

(திரு.வ.திருவரங்கனார் எழுதியது)

சைவசமயத்தையும்

விளக்கி

கல்வி கேள்வி அறிவொழுக்கங்களிலும் சிவபத்தி அடியார் பத்தியிலுஞ்சிறந்து, சைவசமயத்தைப் பரவச் செய்யு முயற்சியில் தமது வாழ்நாள் முழுமையும் பயன்படுத்தி வந்த இப்பெரியவர் விரோதிகிருது ஆண்டு (1851) ஆடித் திங்கள் 9ஆம் நாளன்று திருச்சிராப்பள்ளியிற் பிறந்தனர். இத் தென்றமிழ் நாட்டில் தமிழ் மொழியையும் மகாவித்துவானெனத் தமிழ்ப் புலவர்களாற் கொண்டாடப் பெற்ற திரு. மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கட்கு இவர் வினர். அவர்களோடும் அவர்கள் மாணாக்கரான திரு. தியாகராய செட்டியார் முதலான அரும்பெருந் தமிழ்ப் புலவர்களோடும் நட்புரிமை கொண்டவர். நாகை வெளிப் பாளையத்தில் அறமன்றத்தில் 55 ஆண்டு காலம் இவர்கள் நிறைவேற்றியாக வேலை பார்த்து வந்தமையால் இவர்களது வாழ்நாளின் பெரும்பகுதி நாகை வெளிப்பாளையத்திற் கழிந்தது. இவர்கள் அங்கிருந்த காலத்தில் தமது இளம் பருவத்திலேயே நல்லார் இணக்கமும் சைவசமய நூல் உணர்ச்சியும் பெற்று வந்தனர். அப்போது நாகூரிலும் நாகபட்டினத்திலும் புத்தக வாணிகம் நடத்திவந்த இயற்றமிழ்ப் புலவரும், அன்பு அருள் அமைதி பொறை முதலான உயர் குணங்களிற் சிறந்து விளங்கின வருமான திரு. வெ. நாராயணசாமிப் பிள்ளையவர்களை அடுத்து அவர்கள்பால் திருவிளையாடல் பெரியபுராணம் முதலான உயர்ந்த சைவசமய இலக்கியங்களையும் பிறவற்றையும் பாடங் கேட்டு உணர்ந்து சிவபத்தியிற் சிறந்து வளர்வாராயினர். அக் காலத்தில் வைணவ சமயத்திற் கற்றவர் ஒருவர் வெளிப் பாளையத்தின்கண் திருமாலின் பெருமைகளைச் சொற்பொழி

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/143&oldid=1580100" இலிருந்து மீள்விக்கப்பட்டது