உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

மறைமலையம் – 11 11 ✰

(1889) கார்த்திகைத் திங்கள் 5 ஆம் நாள் வெளிப்பாளையம் சைவசித்தாந்த சபைக் கட்டிடத்தை இரண்டாயிரரூபாவரையில் திரட்டிப் புதுக்கிக் கட்டினர்.1909 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இவர் வேலையிலிருந்து விடுதி பெற்றபின் உறையூரைத் தமக்கு இருப்பிடமாய்க்கொண்டு அங்குள்ள அன்பர்களை ஒன்று சேர்த்துப் பெருந்தொகை திரட்டி வாகீசபக்தசன சபைக் கட்டிடத்தைப் பிங்கல ஆண்டு (1917) தைத்திங்கள் 10 ஆம் நாள் அமைப்பித்தார். இன்னும் இவர் செய்த நன்மைகள் பல. சில நாளாக இருமல் நோயாயிருந்து 1920 ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்கள் 3 ஆம் நாள் சிவபெருமான் திருவடிநீழலை எய்தினர்.

க்

ப் பெரியவர்தம் மனைவியாரான திருவாட்டி அம்மணி அம்மையார் அவர்கள் இவர்தம் நல்லியல்புக்கு ஒத்தவர்களாய் இல்லறத்தைச் செவ்வையாக நடத்துவதிலும், விருந்தினரைப் போற்றுவதிலும், சிவனடியார்க்குத், தொண்டு புரிவதிலும், கணவனார் குறிப்பறிந்து அன்புடன் ஒழுகுவதிலும், சமையற் றொழிலிலும் சிறந்து விளங்கினார்கள். தங் கணவனார் சிவபதவி அடைதற்குச் சிறிதேறக் குறையப் பதினோராண்டுகளுக்குமுன் வ்வம்மை சிவனடி சேர்ந்தார்.

இவர்தம் தகுதிக்கேற்ற

ஓர்

அருமையான

ஆண் மகனையும் நான்கு பெண்மகாரையும் பெற்றனர். இவர் மகனார் திரு. பரமசிவம்பிள்ளை, மறைமலையடிகளார் அவர்கட்கு மாணவராய் அவர்போல் சித்தாந்த சொற்பொழிவுகள் சிறக்கச் செய்யும் ஆற்றல் படைத்தவர். திருவருள் வாழ்க!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/145&oldid=1580102" இலிருந்து மீள்விக்கப்பட்டது