உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாமணிக் கோவை

113

நாகை வெளிப்பாளையம் சைவசித்தாந்தசபையின் அடியவரும்

உறையூர் வாசீகபக்தசனசபையின் நிறுவனருமான திருவாளர் மதுரைநாயகம்பிள்ளை யவர்கள்மேல் மறைமலையடிகள் பாடிய

இரங்கற்பாக்கள்

மணியொளிபோ லெனக்குயிராய் மன்னுசிவம் அருள்சுரந்து துணிவுடைய பிள்ளைமையாம் பருவத்தே துணையாகப் பணிவுடைய நினைத்தந்தென் பரிசின்கட் டுரிசகற்றி அணிசெய்த பான்மையெலாம் அறிந்தறிந்து நைவேனால்.

(1)

ஆராத அன்பினுடன் அடிபணிந்து நீகற்ற

நாரா யணகுரவன் றிருவடியை நான்நணுகிச்

சாராது போயினனேற் சான்றோய்நின் பெருங்கேண்மை சேராது பலவாறாய்ச் சென்றிருப்பேன் சிறியேனே.

(2)

வேறு

குரவன் ஒருபாற் சீர்திருத்தக் குழைந்த அன்பால் மற்றொருபால் விரவி எனைநீ சீர்திருத்த வெய்ய கதிராற் பகல்விளங்கி இரவு மதியால் நின்றொளிரும் இனிய கால எல்லையென உரவாய் வளர்ந்தேன் றன்மை யெலாம் உன்னி உருகி

உழல்வேனால்.

(3)

நானே கடவுள் என்றுரைக்கும் நலமில் நூலின் வழிபற்றி யானே யுழன்ற அந்நாளில் இதனின் வேறாம் உண்மைநெறி

தேனே யனையாய் உண்டென்று தெருட்டி மேலுந் தெய்வவருள் ஊனே புகுந்து போந்ததென அடியேம் உய்ய உவந்தருளி.

(4)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/146&oldid=1580103" இலிருந்து மீள்விக்கப்பட்டது