உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

  • மறைமலையம் – 11

11 ✰

சொல்லும் பொருளுந் தொடர்பாகத் தொல்லோர் கண்டமெய்ந்

நெறியாய்ச் செல்லுஞ் சைவ சித்தாந்தத் தெவிட்டா அமிழ்தந் தெளித்தெடுத்துக் கல்லுங் கரையக் கறைதேயக் கருத்துள் ஊறக் கரைகடக்கச் சொல்லுஞ் சோம சுந்தரன்பால் தொண்டு புரியத் தொடுத்தனையால்.(5)

அறிவு நூலின் பொருள்களெலாம் ஆராய்ந் தறிந்தே அழகாகச் செறியுந்தீந்தேன் சுவையொழுகச் சிவமும் அன்புஞ் சேர்ந்தொழுகப் பொறிகொள் தூவிக் குயிலிசையும் பொருந்தி யொழுகப்

சிறியன் சொல்லும் அவைகூட்டிச் செவிவாய் மடுத்துக்

புகல்திறத்தோய்

களித்தனையால்.

சின்னஞ் சிறிய காலத்தே சிறந்த தந்தை இழந்தேற்குக்

(6)

கன்னன் மொழிசேர் தமிழ்க்குரவர் இருவரோடு காதன்மிகும் அன்னை யனைய நின்றனையும் அரிய துணையா அடைந்திருந்தேன் பின்னை யிருவர் பிரிந்தேகப் பெரிய துணையாய்ப்

பிறங்கினையால்.

சிறக்க வளர்ந்த இந்நாளிற் சிவத்தின் பெருமை தெரிந்தமட்டும் பிறக்க மாக அடியேனும் பின்என் சார்பிற் பிறைமதிபோல் நிறக்க வளரு நின்மகனும் நிகழ்த்தும் உரைகேட் டுவந்ததனை மறக்கப் பிரிந்தாய் இனிநின்போல் மகிழ்வார் உளரோ வையகத்தே.

வேறு

திருவருள்சேர் நினதுளத்தைச் சிவனடிக்கே ஒப்புவித்தாய் உருவருநின் எழிலுடம்பை உருத்திரற்கே உவந்தளித்தாய் இருமைவளர் புகழுடம்பை எந்தையடி யார்க்களித்தாய் அருமைமகார் துயர்கூர அளித்ததுவும் அழகாமோ.

இம்மைதனிற் பிரிந்தாலும் இனியொருகால் இசைந்திடலாம் அம்மைதனில் நீபிரிந்தால் அணைகுவதும் உண்டாமோ?

(7)

(9)

எம்மையிலும் இவையெலாம் இறைசெயலால் நிகழுவதால் நம்மையவன் அருள்வழியில் நடத்துவது நன்றாமே.

(10)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/147&oldid=1580104" இலிருந்து மீள்விக்கப்பட்டது