உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125

முனிமொழிப் பிரகாசிகை

"தேவர் குறளுந் திருநான் மறைமுடிவும் மூவர் தமிழும் முனிமொழியுங்-கோவை திருவா சகமுந் திருமூலர் சொல்லும் ஒருவா சகமென் றுணர்”

ரு

எனும் ஔவையார் திருவாக்கிற் போந்த ‘முனிமொழி' என்பதற்கு வியாச சூத்திரம்' என்று பொருளுரைத்த ஆன்றோருரைப் பொருளொடு பிணங்கி, அப் பொருள் வழக்கின்கண்ணாதல், செய்யுட் கண்ணாதல், நிகண்டு முதலிய நூல்களின் கண்ணாதல் பெறப்படாமையாற் செம்பொருளென்றலும், முன்னும் பின்னுமுள்ள சொற்கள் தம்முள் இணங்கிப் பொருள் பயவாவழி ஒருசொற் றன் பொருளிற் றீர்ந்து பிறிது பொருள் பயக்கும் இலக்கணைப் பொரு ளென்றலும், வியாசர் மாயாவாதப் பொருள் விளங்கச் சூத்திரஞ் செய்த கருத்தறிந்து திரு சங்கராச் சாரியர் பாடியஞ் செய்தாராகலிற், சித்தாந்தசைவப் பொருள் போதிக்கும் நெறிக்கிடையே வழீஇச்செல்லும் அம்மாயாவாதச் சத்திரத் கை ஏனைச் சித்தாந்த சைவ நூல்களோ டொப்ப வைத் துரைத்தல் ஒளவையார்க்குக் கருத்தன்றாகலின் குறிப்புப் பொருளென்றலும் செல்லாமையான், அதனை வாதவூர் முனிவர்' என்று புகழ்பெற்று விளங்கும் 'மாணிக்கவாசக சுவாமிகள் திருவாய்மலர்ந்தருளிய' வெனப் பெயரெச்சத் தொடராக வைத்துப் பொருளுரைத்துக் கோவை திருவாசகமும்' என்பதனோடு கூட்டிக்கோடலும் வேண்டு மெனப் புதுவதாக வொரு பொருள் கூறுவார் அச்செய்யுட் பொருளை நுணுகி ஆராயுமதுகையின்றி அங்ஙனங் கூறினாரென்பதும், அதற்குத் தொல்லாசிரியர் கூறு முரையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/158&oldid=1580115" இலிருந்து மீள்விக்கப்பட்டது