உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

மறைமலையம் – 11 11

நடுக்கின்றி நிலையுறுவதா மென்பதும் போதரச் சிறிது காட்டுதும்.

ஒரு

66

பிரமசூத்திரம், வேதாந்த சூத்திரம்,வியாச சூத்திரம் என்பன பொருட்கிளவிகளாம். அது முதலில் அதா தோப்ரஹ்மஜிஜ்ஞாஸா” என்று தொடங்கிப் பிரமப்பொருளை அறிதல் வேண்டுமென, முறையாக அறிவுரை கூறி, பிரமத்தைக் கூறுவதனால் 'பிரமசூத்திர' மெனவும், கணாத சூத்திரம், கௌதமசூத்திரம், காபில சூத்திர முதலியவற்றைப் போல் வைசேடிகம், நியாயம், சாங்கிய முதலிய வேறு பொருள்களை யுணர்த்தாது, வேதாந்த மெனப்பட்டு உப நிடதங்களிற் பொருள்பெறக் கிளந்தோதப்படும் ஞானத் தையே விரித்து விளக்குஞ் சிறப்பால் "வேதாந்தசூத்திர” மெனவும், ஆக்கியோன் பெயரால் ‘வியாச சூத்திர’ மெனவும், ஆக்கியோன் பெயரால் ‘வியாச சூத்திர’ மெனவும் வழங்கப் படும். இஃது யாது பயன்கருதி யியற்றப்பட்ட தோவெனின், மறையின் முன்பாகத்திற் கூறப்படும் கர்மத்தையே பிரமப் பொருளாக நிறுவித் தம் மாணாக்கராகிய ஜைமினியா லியற்றப்பட்ட சூத்திரப் பொருளை மறுத்து. அம்மறையின் பிற்பகுதியாகிய உபநிடதங்களிற் கூறப்படும் ஞானத்தை விளக்குதற் பொருட்டு இயற்றப்பட்டதாமென்பது.

இங்ஙனம் கர்மத்தையே பிரமமாகக் கூறி எழுந்த ஜைமினி சூத்திரத்தையும், ஞானத்தையே பிரமமாகக் கூறி எழுந்த வேதாந்த சூத்திரத்தையும் உற்று நோக்குவார்க்கு, ஞானச்செயல் வடிவராகிய சிவபரஞ்சுடரின் மேலான ஆற்றல்களாகிய தாழிலை

விளக்கவொன்றும்,

மெய்

மய்

யறிவை விளக்க மற்றொன்றும் எழுந்தவுண்மை நன்கு விளங்கும். இதனாற் சிவபெருமானது தொழில் திறத்தை விளக்கம் ஜைமினி சூத்திரமும் ஞானத்திறத்தை விளக்கும் வேதாந்த சூத்திரமும இன்றியமையாதனவாம் என்பதூஉம், இவற்றுள்ளும் ஞானத் திறத்தை விளக்கும் வேதாந்த சூத்திரம் ஏனையதினும் மிகச் சிறந்ததாம் என்பதூஉம் பெறப்படும். ஏனைச் சூத்திரங்களாற் கூறப்படாததும், அச்சூத்திரப் பொருள்களினுந் தலைமையுற்று மக்களுக்கு உறுதி பயக்குஞ்சிறப்புடையதுமான ஞானத்தை விரித் துரைக்கும் வியாச சூத்திரமே 'வேதாந்த சூத்திரம்' எனப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/159&oldid=1580116" இலிருந்து மீள்விக்கப்பட்டது