உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனிமொழிப்பிரகாசிகை

139

‘வாதவூர் முனிவர்' என வுரை விரித்தல் மூவகைப் பொருளில் ஒன்றுமாவான் செல்லாதென்பதூஉம், சங்கரர் பாடி ாடியப் பொருளுணர்ச்சி யுலகின்கண் உவர்ப்புணர்ச்சி தோன்றித் துறவற நெறியிற் சேறற் கேதுவாமென்றல் சைவ சித்தாந்தப் பொருளொடு பிணங்குமேனைச் சமயத்தார் கூறும் ஆரவார வுரைகளாதலின் அவை ஈண்டைக்கேலாவென்பதூஉம், 'மொழியும்' என்பதனை நடுவுநிலைத் தீவகமாக வைத்துப் பொருள் சொல்லுதல் ஏலாதென்பதூஉம் இனிது விளக்கப்பட்டன வென்க.

முனிமொழிப் பிரகாசிகை

முற்றும் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/172&oldid=1580129" இலிருந்து மீள்விக்கப்பட்டது