உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

மறைமலையம் – 11

தொழிந்தன வெல்லாம் பொய் யென்னும் அவருரை தேறு வார்க்கெல்லாம் தாமே பிரமமென்னும் அவருரை தேறு வார்க்கெல்லாம் தாமே பிரமமென்னும் உணர்வு தோன்றி ஆணவமிகுதலானும், அவ்வுணர்வால் அவர் நல்லது தீயது பகுத்துணரமாட்டாமல் தாம் வேண்டியவாறெல்லாம் உலகிற்கு இடர்பயப்ப ராதலானும் அவ்வாறு சொல்லுதல் பொருந்துமாறில்லை. இது கிடக்க.

எனக்

இனி 'முனிமொழியும்' என்பதில் 'மொழியும்' எனுஞ் சொல்லை நடுவுநிலைத் தீவகமாக வைத்து ஒவ்வொன் றோடுங் கூட்டியுரைத்துக் கோடற்பாற்றென்றலும் பொருந் தாமை காட்டுதும், 'தேவர் மொழியுங் குறள்' 'மூவர் மொழியுந்தமிழ்' 'திருமூலர் மொழியுஞ் சொல்' கூட்டியுரைத்தல்போலத் ‘திருநான் மறைமுடிவு' என்புழியும் அவ்வாறு கூட்டிப் பொருளுரைத்தல் ாருளுரைத்தல் வேண்டும். அவ் வாறியைத்துப் பொருள் கோடலாகாமையின் 'மொழியும்' எனுஞ் சொல் ஆண்டு நின்று பொருள் வற்றும். அதுவேயு மன்றித் ‘திருமூலர் மொழியுஞ் சொல்' எனவுரைக்கும்வழி ‘மொழியும்' என்பதுஞ் சொல்லும் என்னும் பொருளே பயப்ப 'சொல்' என்பதும் ‘சொல்' என்னும் பொருளே பயப்பச் வொரு பயனுமின்றி யொருபொருண்மே லிரண்டு சொல் வந்தனவெனப் படுமாகலின் அதுவும் போலியாமென் றொழிக.

என்றித் துணையுங் கூறியவாற்றால், 'முனிமொழியும்' என்பதற்கு ‘வேதாந்த சூத்திரம்' எனப் பொருளுரைத்தல் ஔவையார் குறிப்பொடு படுத்துக்கொள்ளப் படுவதா மென்பதூஉம், 'முனி' என்னுஞ் சொல்லுக்கீண்டு 'வேத வியாத முனிவர்' என்று கொள்வதே யன்றிப் பிறவாறு கூறுதல் வழூஉப்படுமென்பதூஉம் வேதாந்த சூத்திரம் மாயா வாதப் பொருளே போதிக்குமென்பார்க்கு உபநிடத முதலிய வெல்லாக் கலைகளையும் அவ்வாறு கூறவேண்டுதலின் அது வெறுங் கூற்றே யாமென்பதூஉம், சங்கரர் வேதாந்த சூத்திரக் கருத்தறிந்துரை யெழுதினாரென்றல் தொல்லைமரபு மாறுபாடாமென்பதூஉம், சங்கரர் சைவசித்தாந்தப் பெரியரென்றல் உலக வழக்கொடும் புலனெறி வழக்கொடும் மாறுகொள்ளுதலின் அது கொள்ளற்பாற்றன்றென்பதூஉம், 'முனி மொழியும்' என்பதில் 'முனி' என்னுஞ் சொல்லுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/171&oldid=1580128" இலிருந்து மீள்விக்கப்பட்டது