உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மலை

145

எடுத்த முடிவு இது. இதுவே 'தனித்தமிழ் இயக்கம்' தோன்றிய வரலாறு ஆகும்.

உறுப்பை வெட்டி ஓட்டல் :

தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுலித்த தந்தையும், மகளும் தவத்திரு மறைமலையடிகளாரும் நீலாம்பிகையும் ஆவர். தோன்றிய இடம் மறைமலையடிகள் வாழ்ந்த வளமனையாய் இருந்து, இந்நாளில் ‘மறைமலையடிகள் கலைமன்ற மாளிகை' யாய்த் திகழ்வதாகும். இது ‘பல்லவ புரம்' ஆகிய பல்லாவரத்தில் உள்ளது. இவ்வியக்கம் தோன்றிய ஆண்டு 1916. அப்பொழுது அடிகளார்க்கு அகவை நாற்பது.

நாற்பத்து ஐந்தாம் அகவையிலே எழுதிய ‘அறிவுரைக் கொத்து' என்னும் நூலிலே. 'தமிழிற் பிறமொழிக் கலப்பு,' தனித்தமிழ் மாட்சி என்னும் கட்டுரைகளை வரைந்தார் அடிகளார். தனித்தமிழும் கலப்புத் தமிழும்' என்றொரு கட்டுரையைச் செந்தமிழ்ச் செல்வியில் எழுதினார். இளங்குயில் நீலாவோ, புலத்துறை முற்றியபோதில் ‘தனித்தமிழ்க் கட்டுரைகள்' என்னும் நூலும், வட சொல் தமிழ் அகர வரிசை என்னும் நூலும் ஆக்கினார். தனித் தமிழ் பற்றிய அடிகளார் குறிப்புகளுள் சில : இயற்கைச் சொற்களால் அமைந்ததாகிய தமிழிற் பிற சொற்களைப் புகுத்துதல் எதுபோல் இருக்கிறது என்றால், எல்லா உறுப்புகளும் அமைந்த அழகியதோர் உடம்பில் உள்ள உறுப்பு களை வெட்டி எரித்துவிட்டு வேறு மண்ணாலும் மரத்தாலும் செயற்கையாக அவ் உறுப்புகள் போற்செய்து அவற்றை அதன் கண் ஓட்ட வைத்துப் பார்த்தலுக்கே ஒப்பாய் இருக்கின்றது.

66

“மயிர், குஞ்சி, கூந்தல் முதலிய தமிழ்ச் சொற்களை விடுத்து ‘ரோமம்”, சரீரம், சிரசு. வதனம் என்பவற்றையும்,

கண், காது, செவி, மூக்கு என்பற்றுக்கு ‘நயனம்' கர்ணம், நாசி என்பவற்றையும்,

மிடறு, கழுத்து என்பவற்றுக்கு மாறாகக் கண்டம் என்னும் சொல்லையும்,

தோள், கை முதலியன இருக்க புஜம் கரம் என்பவற்றையும், வயிறு, அகடு இருக்க உகரம் குக்ஷி என்பவற்றையும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/178&oldid=1580135" இலிருந்து மீள்விக்கப்பட்டது