உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மலை

151

உரிய வாய்ப்பைத் தேடினார். தமக்குக் கிடைக்கும் நூல்களை வீட்டில் இருந்து ஓதவும் செய்தார்.

தந்தையார் மறைவு :

வேதாசலத்தின் அகவை 12; பள்ளிக்குச் சென்று ஆறு ஆண்டுகளே ஆகியிருந்தன. உயர்நிலைப்பள்ளி முதல் வகுப்பில் கால்வைக்கும் போதே அக் குடும்பத்தில் வாழ்வாய் வளமாய் வைப்பாய் இருந்த சொக்கநாதர் என்னும் ‘பழமரம்' கால் சாய்ந்து விட்டது! அடியற்ற ஆலமரத்தை வீழ்து தாங்குவதுபோல் சின்னம்மை தாங்கினார்! அதனால், தம் ஒரே ஒரு மகனுக்குத் 'தந்தையோடு கல்விபோம்' என்பதைப் பொய்யாக்குவதுபோல், தாய் சின்னம்மையார் தந்தை கடமையையும் சேர்த்துச் செய்தார். குடும்ப நிலையை உணர்ந்து மேலும் படிப்பிலே அழுத்தமாக ஊன்றினார் வேதாசலம். ஆயினும், குடும்பத்தின் வறுமையும் சூழலும் அழுத்திய அழுத்தத்தால் ஒன்பதாம் வகுப்புக் கல்வியுடன் பள்ளிக் கல்வி முடிந்தது! வெளியுலகில் பெறும் கல்விக்குக் காலம் என்ன: இடம் என்ன! அளவென்ன!

டு

'பள்ளியெழுச்சி' கண்ட நாம் வேதாசலம் ‘தமிழ்த் தேனீ’ ஆதலைக் காண்போம். வேதாசலம் மறைமலையான வரலாற்றை நாம் அறிந்து கொண்டதால், இனி, மறைமலை என்றே காண்போம்! அடிகளார் எனச் சுருக்கமாகவும் உரைப்போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/184&oldid=1580141" இலிருந்து மீள்விக்கப்பட்டது