உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

  • மறைமலையம் – 11

11 ✰

காலத்தில் இடரெதுவும் இல்லாத ஓர் ஆண் மகவு பிறந்தது. அம் மகவுக்கு ‘வேதாசலம்' என்னும் பெயரைச் சூட்டினர். நாகை வாழ் சொக்கநாதர் தம் மகவுக்கு வேதாசலம் என்னும் பெயரிட்ட கரணியம் இதனால் விளங்கும். வேதாசலம் பிறந்தநாள் 1876 ஆம் ஆண்டு சூலைத்திங்கள் 15ஆம் நாள் பரணி ஓரை மாலை 6-35 மணியாகும்.

வேதம் அசலம் என்னும் இரண்டு சொற்களின் சேர்ப்பே ‘வேதாசலம்' என்பதும், அவ் வட சொற்கள் இரண்டன் தென் சொற்களே ‘மறைமலை’ என்பதும் இவண் அறிந்து கொள்ளத் தக்கதாம்.

பழுத்த புலவர் வழுவையும் திருத்தும் ஆற்றலும், ஆடித் திரியும் பருவத்திலேயே பாடிப் பழகும் திறமும் அமைந்த குழந்தையர் வாழும் அம்மண்ணின் மணம், வேதாசலக் குழந்தையின் வருங்காலத் திறத்திற்கு வைப்பு நிதியாக வாய்த்திருந்தது போலும்!

இளமைக் கல்வி :

தளர்நடை கொண்டு மழலை பொழிந்த வேதாசலம் பள்ளிப் பருவம் எய்திய நிலையில், நாகப்பட்டினத்தில் சிறந்து விளங்கிய வெசிலியன் மிசன் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

66

விளையும் பயிர் முளையிலே; விதைக்காய்ப் பிஞ்சிலே” என்பது பழமொழி. அவ்வாறே தொடக்கப் பள்ளியில் பயிலும் போதே வேதாசலத்தின் அறிவுக் கூர்மையும் பண்பு நலமும் சிறந்து விளங்கின. பெற்றோர் மகிழவும் ஆசிரியர் பாராட்டவும் பயின்றார். பள்ளியில் வகுப்புத் தலைவன் என்னும் சிறப்பும், கல்வியில் தலை மாணவன் என்னும் தகுதியும் உண்டாயின. வீட்டில் கல்வி : :

வேதாசலம் தமிழ்க் கல்வியில் தனிச்சிறப்புக் கொண்டி ருந்தார். அதனைப் போலவே ஆங்கிலக் கல்வியிலும் கருத்து ஊன்றினார். ஆங்கிலக் கல்விக்கு ஆங்குக் கிடைத்த வாய்ப்புப் போதுமானதாக இருந்தது. ஆனால் தமிழ்ப் பாடத்தின் அளவு, வேதாசலத்தின் ஆர்வத்திற்கு ஈடுதருவதாக அமையவில்லை! “யானைப் பசிக்குச் சோளப் பொரி” என்பது போலவே இருந்தது. அதனால் பள்ளிக்கூடத்திற்கு வெளியே தமிழ்க்கல்வி பெறுதற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/183&oldid=1580140" இலிருந்து மீள்விக்கப்பட்டது