உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மலை

காளமேகம் அசைபோட்டுக் கொண்டு வந்தார்.

“நாக்குத் தெறித்துவிழ நாகேசா”

149

என்று தொடர வேண்டும் என்பது அவர் வேட்கை. சுவரில் உள்ள புதுத் தொடரைக் கண்டார்! ‘ஆசு' கவி என்னும் தம்மை, ‘ஆசு’ கவியாக்கி விட்ட அவ்வூர்க் குழந்தைகளை வெறுக்க மனம் வராமல் தமக்கு உண்டாகிய செருக்குக்கும் சீற்றத்துக்குமே வருந்தினார்! அக்குழந்தைகளை அழைத்து அருகே வைத்துப் பாராட்டினார். இது செவி வழியாக அறியவரும் செய்தி.

பெற்றோர் :

நாகப்பட்டினத்தை

அடுத்துள்ளதோர்

ஊர்

இந் ந் காடம்பாடி என்பது. அவ்வூரின் புகழ் வாய்ந்தஅறுவை மருத்துவர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் சொக்கநாதர் என்பது; அவர் நாகப் பட்டினத்தில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார். அவர்தம் இனிய இயல்பாலும், மருத்துவத் தேர்ச்சியாலும் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்தார். அவர்தம் இனிய வாழ்க்கைத் துணைவியார் சின்னம்மை என்பார்.

திருக்கழுக்குன்றம் :

சொக்கநாதரும் சின்னம்மையும் கருத்தொத்த வாழ்க்கைத் துணையாக இருந்தும், மகப்பேறு வாய்க்கவில்லை. அதுவும் ஓராண்டு ஈராண்டு என்றில்லாமல் நெடுங்காலம் மகப்பேறு வாய்க்கவில்லை. சொக்கநாதருக்கு, அகவை அறுபதைத் தாண்டிற்று; சின்னம்மைக்கு, அகவை நாற்பதைத் தாண்டிற்று. இனி மகப்பேறு வாய்ப்பது அரிதே என்ற நிலைக்கு ஆட்பட்ட போதில், திருக்கழுக் குன்றத்திற்குச் சென்று வேதாசலரையும் சொக்கம்மையையும் வழிபட்டால் மகப்பேறு வாய்க்கும் என்று கேள்விப்பட்டனர்.

தவப்பிறவி :

6

திருக்கழுக்குன்றம் ஒரு வகையில் தனிச் சிறப்புடையது. மலைமேல் அமைந்த சிவன்கோயில் தமிழ் நாட்டில் அஃதொன்றே என்பது அச் சிறப்பு. அம் மலைமேல் பல்கால் ஏறி இறங்கி வழிபட்டனர். ஒரு மண்டலம் (நாற்பது நாள்) நோன்பு காண்டு மலையேறி வழிபட்டனர். அவர்கள் நம்பியது வீண்படாமல் சின்னம்மையார் வயிறு வாய்த்தார். உரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/182&oldid=1580139" இலிருந்து மீள்விக்கப்பட்டது