உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

❖ 11❖ மறைமலையம் – 11

நாகைச்சிறப்பு :

2. பள்ளி எழுச்சி

‘கற்றார் பயில் கடல் நாகை' எனப்பாடு புகழ் பெற்றது நாகப்பட்டினம். அவ்வூர்க் குழந்தைகளும் அறிவாற்றல் மிக்கோராக விளங்கினர் என்பதற்கு ஒரு செய்தி கூறப்படுகின்றது:

'வசைபாடக் காளமேகம்' என்று சொல்லப்படும் புலவர், ஒருகால் அவ்வூர்க்குச் சென்றார். அவர்க்குப் பசியாயிற்று! சோறு விற்குமிடம் எது” என்று தெரிந்து கொள்ள விரும்பினார். அவர் வந்த தெருவில் சில சிறுவர்கள், பாக்கு வைத்துத் தெறித்து விளையாடிக் காண்டிருந்தனர். அவர்களிடம் புலவர் "சோறு எங்கே விக்கும்?” என்றார். 'விக்கும்’ என்ற சொல்லின் வழுவை அறிந்து கொண்ட சிறுவர்களுள் ஒருவன் “இது தெரியாதா?” “சோறு தொண்டைக்குள் விக்கும்” என்றான்! உடனிருந்த சிறுவர்கள் அனைவரும் அவன் செய்த கேலியைப் புரிந்து கொண்டு, பெருஞ் சிரிப்புச் சிரித்தனர். பசிக்கடுமை, சிறுவன் மறுமொழி, சிறுவர்கள் நகைப்பு எல்லாம் சேர்ந்தால் வசைபாடும் காளமேகத்தை வாளா விட்டுவிடுமா?

L

“பாக்குத் தெறித்துவிளை யாடுசிறு பாலகர்க்கு

நாக்கு

என்ற அளவில் நினைத்து. ஆங்குக் கிடந்த கரித்துண்டு ஒன்றை எடுத்து, இவ்வடியை ஒரு சுவரில் எழுதினார். பின்னர்ப் பசியாறிக் கொண்டு வந்து வசைப்பாட்டை முடிக்கலாம் என்னும் எண்ணத்துடன் சென்றார்!

கடுகடுத்த காளமேகம் கரித்துண்டால் சுவரில் எழுதியதைப் படித்துப்பார்த்த சிறுவருள் ஒருவன், அவர் வைதுதான் பாடுவார்! அதற்கு இடம்வைக்காமல் செய்து விடவேண்டும் என்று துணிந்து அக் கரித்துண்டை எடுத்து, “நாக்குத் தமிழ்விளங்க நாகேசா” என இரு சீர்களை எழுதிவிட்டான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/181&oldid=1580138" இலிருந்து மீள்விக்கப்பட்டது