உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

மறைமலையம் – 11 11

துணை நாடும் அளவு போதுமானதாக இருந்தமையால் அடிகளார் தம் பதினைந்தாம் அகவை தொட்டு இருபத்தோராம் அகவைக்குள் கற்றுக்கொண்ட ஆறாண்டுக் கல்வி அவரைக் கலை ஞாயிறு' என விளங்கச் செய்தது. அவர் அவ்வகவையிற் பெற்ற கல்வியைத் தாம் இயற்றிய திருவொற்றியூர்முருகர் மும்மணிக் கோவை முகப்பில் குறிப்பிடுகிறார்:

“எமது பதினைந்தாம் ஆண்டில் முறைப்படி தொடங்கிய தமிழ்ப் பயிற்சியானது எமது இருபத்தோராம் ஆண்டிற்குள் தொல்காப்பியம், திருக்குறள், சிற்றம்பலக் கோவையார் என்னும் மூன்று நூல்களையும் முழுதும் நெட்டுருச் செய்து முடித்தோம்.

“கலித்தொகை, பத்துப்பாட்டு/ சிலப்பதிகாரம், நாலடி முதுலிய நூல்களிற் பெரும் பகுதிகள் அங்ஙனமே நெட்டுருச் செய்து முடிக்கப்பட்டன’

சிவஞானபோதம், சிவஞான சித்தியார் என்னும்நூல்கள் இரண்டும் முழுமையும் நெட்டுருச் செய்து முடிக்கப்பட்டன. வையேயன்றி நன்னூல் விருத்தி, இறையனார் அகப்பொருள் உரை, தண்டியலங்காரம் முதலான நூல்களும் முன்னமே முழுமையும் நெட்டுருச் செ4ய்து முடிக்கப்பட்டனவாகும்.

“கல்லாடம், சீவகசிந்தாமணி, பெரியபுராணம் என்னும் நூல்களின் சொற்சுவை பொருட்சுவைகளில் பெரிதும் மூழ்கி யிருந்தும் அவற்றிலிருந்தெடுத்துப் பாடஞ் செய்த செய்யுள்கள் மிகுதியாய் இல்லை. என்றாலும், அவற்றின் சொற்பொருள் நயங்கள் எமதுள்ளத்தில் வேரூன்றி நின்றன. இங்ஙனமாக விழுமிய தமிழ்ப்பழ நூல்களில் எமது கருத்து ஈர்ப்புண்டு நின்று பயின்ற பயிற்சியினாலேயே செய்யுளும் உரையும் தனிச் செந்தமிழ் நடையில் எழுதும் திறம் எமது இளமைப்பருவத்திலேயே எமக்கு வாய்ப்பதாயிற்று" என்பதாம் அது.

அடிகளார்க்கு இருபத்தோராம் அகவை என்பது 1897 ஆம் ஆண்டாகும். அக் காலத்திற்குள் தொல்காப்பியம் (1847, 1868, 1885), சிலப்பதிகாரம் (1880), சிந்தாமணி (1887), கலித்தொகை (1887), பத்துப்பாட்டு (1889), மணிமேகலை (1894) என்பவை அச்சில் வெளி வந்திருந்தன. புறநானூறும் (1894) வெளிவந்தது. இவை பழந்தமிழ் நூல்கள். திருக்குறள் மூலம் 1812 ஆம் ஆண்டே வெளிவந்தது. உரைப்பதிப்பு 1830 இல் சரவணப் பெருமாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/187&oldid=1580144" இலிருந்து மீள்விக்கப்பட்டது