உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மலை

157

தான்

அறிமுகம் வியப்பாயிற்று! திகைப்பாயிற்று! விம்மிதமும் ஆயிற்று! கட்டுரையின் ஆழமென்ன! விரிவென்ன! அதனை எழுதியவர் முதுவர் அல்லாத இவ்விளைஞரா! நரைமுடியாமலே சொல்லால் முறை செய்த கரிகால் வளவனின் மறுவடிவம்தான் இவ் விளைஞரோ என எண்ணினார். தாம் போற்றி வணங்கும் மெய்கண்டாரும் ஞானசம்பந்தரும், குமரகுருபரரும் இப்படித் இளந்தையில் இருந்திருப்பரோ என உள்ளுள் வியந்தார்! வினாக்கள் சிலவற்றை எழுப்பி அவர்தம் புலமை நலம் அறிந்து கொள்ளத் தலைப்பட்ட நிலையில், மறைமலை உடனுக்குடன் வழங்கிய மறுமொழிகள் அவர்தம் கல்விப் பரப்பைக் காட்டுதலால் இவ் விளைஞர் புலமைத்திறம் இந்நாட்டுக்குப் பயன்படுதற்கு வழிகாணுதல் வேண்டும் என்னும் ஓர் எண்ணம் உண்டாயிற்று! அதனால்; “உன்னை விரைவிலே சென்னைக்கு வருவிப்போம்.நீ அந்தப் பக்கங்களில் இருப்பதே நல்லது” என்று கூறினார் நாயகர். இயற்றமிழ் வல்ல நாராயணசாமியார் அடிகளுக்கு

ஓராசிரியர்!

சைவசித்தாந்த சண்டமாருதம் சோமசுந்தர நாயகர் மற்றும் ஓராசிரியர்! நுண்மாண் நுழைபுல மறைமலையார்க்குக் கூடிவரும் காலம் தேடிநின்ற வாய்ப்புகள் இவை

கட்டுரை வன்மை :

மறைமலையார் பள்ளியில் பயின்றுவந்த காலத்திலேயே ஒரு பெரும் வேட்கை கொண்டார். தாம் பயின்ற கிறித்தவப் பள்ளியில் வகுப்பிலும் வெளியிலும் திருக்கோயிலிலுமாக நடத்தப்பெற்று வந்த கிறித்தவ மதக் கருத்துரைகள், வெளியீடுகள் கூட்டங்கள் ஆகியவற்றை உற்று நோக்கினார். அவ்வழிகளில் தாமும் தொண்டு செய்தல் வேண்டுமென உட்கொண்டார். அதனால் தம் மொத்த பள்ளி மாணவர்களைச் சேர்த்துக்கொண்டு, 'இந்து மதாபிமான சங்கம்’ என ஓர் அமைம்பை ஏற்படுத்தினார் அதன் வழியாக மாணவர்களுக்குச் சமய அறிவும், மொழியறிவும், உரையாற்றும் திறமும் உண்டாக வழி கண்டார். ஒருவர் எதிர்காலம் எப்படி எப்படியெல்லாம் அமையும் என்பதற்கு முன்னோட்டம் போன்ற செய்திகளுள் ஒன்று ஈது; மற்றொன்று அவ்விளமைப் பருவத்திலேயே மறுப்புக்

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/190&oldid=1580147" இலிருந்து மீள்விக்கப்பட்டது