உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

❖ 11❖ மறைமலையம் – 11

கிறித்துவக் கல்லூரி :

5. பூஞ்சோலை

உண்மை விளக்க ஆசிரியராக இருந்த அடிகள் ஒரு நாள் செய்தித் தாளில், சென்னை கிறித்தவக்கல்லூரிக்குத் தமிழாசிரியர் ஒருவர் வேண்டியிருக்கும் விளம்பரம் கண்டார். நாயகர் அதற்கு வேண்டுகை விடுக்கத் தூண்டினார். அக் கல்லூரியின் முதல்வர் பெரும்புகழ் வாய்த்தவர், புலமையாளர்களால் பாடுபுகழ் பெற்றவர்; மாணவர் ஆசிரியர் அரசினர் பெற்றோர் ஆகிய அனைவரின் ஒருமித்தபுகழுக்கும் உரிமை பூண்டவர்; வில்லியம் மில்லர் என்பார் அவர்; அக்கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராக விளங்கியவர் பரிதிமாற் கலைஞர் எனப்படும் சூரிய நாராயண சாத்திரியார்! விரிந்த நோக்கும் பரந்த கல்வியும் சிறந்த பாவன்மையும் உயர்ந்த பல்துறையறிவும் ஒருங்கே கொண்ட ஏந்தல் அவர். அக்கல்லூரியின் ஒரே ஓர் ஆசிரியப் பணிக்கு விண்ணப்பம் விடுத்தவர் அறுபதின் மராம்! அவருள் நனி இளைஞர் நம் அடிகளாராம்! அவர் புலமையே அனைவர் புலமையிலும் விஞ்சி நின்றதாம். எழுத்துத் தேர்விலே முதன்மை பெற்ற ‘மலை’யைப் ‘பரிதி' நேர்முகம் காண நேர்ந்ததாம்; எப்படி?

பரிதியும் மலையும் :

“தொல்காப்பிய இலக்கணத்தில் இருந்து எளிதில் விடை யிறுக்க ஒண்ணாக் கேள்விகள் மூன்றினைக்கேட்டார். அடிகள் எளிதாக விடையளித்தார். சாத்திரியார் அடிகளின் இத் திறங்கண்டு அவரை அளவின்றிப் பாராட்டினார்!

"இளமை மிடுக்கும். புலமைத் துடுக்கும் உடைய அடிகள், இவரென்ன நம்மை ஆராய்வது' என்று ஆணவங் கொண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/197&oldid=1580154" இலிருந்து மீள்விக்கப்பட்டது