உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மலை

163

சித்தூரில் மாவட்ட உரிமை மன்ற நடுவராகப் பணிசெய்து வந்தார். அவர்க்குச் சிவணியக் கொள்கைகளைத் தமிழ் ஆங்கிலம் என்னும் இரு மொழிகளின் வழியாகவும் பரப்புதல் வேண்டும் என்னும் பெருவேட்கை இருந்தது. அதனால் ‘சித்தாந்த தீபிகை அல்லது உண்மை விளக்கம்' என்னும் மாதிகை (திங்களிதழ்) தொடங்கினார். அவ்விதழைத் தம்மோடும் இருந்து நடாத்தத் தக்க புலமைச் செல்வர் ஒருவரை வேண்டி நின்றார். நல்லசாமியாரையும் மறைமலையாரையும் தம் மாணவராகக் கொண்டு இருந்த சோமசுந்தரநாயகர், இருவர்க்கும் இணைப்புப் பாலமாக விளங்கினார்.சித்தாந்த தீபிகையின் தமிழ்ப் பதிப்புக்கு மறைமலையடிகள் ஆசிரியராய் முதல் இதழ் 1897 ஆம் ஆண்டு சூன் திங்கள் 21ஆம் நாள் வெளிவந்தது. அதன் முதல் ஐந்து இதழ்கள் அளவுக்கே அடிகள் ஆசிரியராக விளங்கினார். அதில் திருமந்திரம், சிவஞான சித்தியார், தாயுமானவர் பாடல், குறிஞ்சிப் பாட்டு ஆங்கில மொழிபெயர்ப்பு என்பன வெல்லாம் தொடர் கட்டுரைகளாக வெளிப்பட்டன. காதல் மணமும் கலைமணமுமாம் இம் 'மணமலர்’, ‘பூஞ்சோலை'ப் பரப்பாகிப் பொலிதலைக் காண்போம்.

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/196&oldid=1580153" இலிருந்து மீள்விக்கப்பட்டது