உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

மறைமலையம் – 11

முனிமொழிப் பிரகாசிகை :

அக் காலத்தில் ஈழத்து யாழ்ப்பாணத்தில் சபாபதி நாவலர் என்னும் பெரிய பெரும்புலவர் ஒருவர் இருந்தார். அவர் உரைநடை வரைதலில் தனித்திறம் வாய்ந்தவர். இவர் வரைந்த நூல்களுள் ஒன்று திராவிடப் பிரகாசிகை என்பது அவர் நடத்திய மாதிகை (திங்களிதழ்) ஞானாமிர்தம் என்பது. அதில் “தேவர் குறளும்” எனத் தொடங்கும் பாடலில் வரும் “முனிமொழியும் கோவை” என்பதைத் திருக்கோவை எனப் பொருள் கண்டார். இக் கருத்தை ஒப்பாத சோமசுந்தர நாயகர் “முனிமொழி” வேதாந்த சூத்திரமே என்பதை வற்புறுத்தி முனிமொழிப் பிரகாசிகை என்னும் நூலை வரையுமாறு அடிகளை வேண்டினார்;

ஆசிரியர் உரையேற்ற அடிகள், அவ்வாறே செய்தார். இந்நூலைத் தாம் படுத்த படுக்கையில் நோயாய்க் கிடந்த சபாபதி நாவலர் படிக்கக் கேட்டு, தமக்குப் பின்னும் தமிழ் உரைநடை வரையவல்லார் ஒருவர் உள்ளார் என்று பூரிப்படைந்து வாழ்த்தினர். தம் கருத்தை மறுத்துரைத்தார் என்னும் கைப்பு இல்லாமல் கன்னித்தமிழ் நடையைப் பாராட்டியமை நாவலர் சால்புக்கும் அடிகளார் உரைநடைத் திறத்திற்கும் ஓரொத்த சான்றுகளாம்.

நாவலர் உடல்நலம் பெற்று 19-4-1900 இல் அடிகளார் இல்லத்திற்கு வந்தார் “சபாபதி நாவலர் மகன் எளிய குடிசைக்கு வந்ததார். அறச் செயல்களுக்கு வென்றன செய்வேன் என்றேன் என்று தம் நாட்குறிப்பில் அடிகளார் இதனைப் பொறித்துள்ளார். 3-12-1901 இல் “சபாபதி நாவலர் என் நூலைப் பாராட்டிக் கடிதம் எழுதினார்” என்றும் குறித்துள்ளார்.

சமயநூற்கல்வி :

பாடல் பயிற்றிய அடிகளார், பாடம் பயிலவும் விரும்பினார். அவர் என்றும் ‘ஓதுவது ஒழியாதவர்; பயிலும் காலம் தொட்டே பழகிப்போன நடைமுறை. தமிழ் இலக்கண இலக்கியம் கரைகண்ட அடிகள் சிவனிய நூல்களையும் ஆழ்ந்து கற்றிருந்தார். எனினும் குருவர் ஒருவர் வழியே மெய்ப்பொருள் நூல்களைக் கற்பதே முறைமை எனக் கருதினார். கருது குருவர் ஒருவர் முன்னமே கருத்துள் இடம்பெற்றிருந்தாரே! சோமசுந்தர நாயகர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/199&oldid=1580156" இலிருந்து மீள்விக்கப்பட்டது