உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மலை

169

என்பதொரு கட்டுரையும் அதில் உள்ளன. சொல்லாய்விலும், தொல்காப்பிய ஆய்விலும் அடிகளார் கொண்டிருந்த ஈடுபாடு “தமிழ்ச்சொல் உற்பத்தி”, “தொல்காப்பிய பரிசீலனம்”, "தொல்காப்பிய முழுத் தன்மை" ஆகிய கட்டுரைகளால் விளங்கும். இவ்விதழ் வழியாக வெளிவந்த நூல்களில் பெரியதும் அரியதும் ஆகியது “மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்” என்பதாகும்.

“நமக்குப்பின் நாம் நடத்திய சைவசித்தாந்த விளக்கத்தையே நீயே நடத்துக” என்று நாயகர், தம் இறுதி நாளில் அடிகளாரிடம் கூறியிருந்தார். அதனை ஒப்பிய அடிகளார் அப் பணியைக் கல்லூரி விடுமுறை நாள்களில் எல்லாம் சிறப்பாகச் செய்தார். அருட்பா - மருட்பாப் போர் :

-

அந்நாளில் “அருட்பா மருட்பாப்” போர் நிகழ்ந்தது. "வள்ளலார் பாடிய பாக்கள் அருட்பாக்கள் அல்ல; மருட் பாக்களே” என்பது போரின் ஊடகம். ஒருபால் வள்ளலார் கூட்டம்; மற்றொருபால் ஆறுமுக நாவலர் கூட்டம். இக்கூட்டத்துள் வள்ளலார் வழிக் கூட்டம் மறைமலையடிகளை அரணாகப் பற்றியது. நாவலர் வழிக் கூட்டத்தின் நாயகராகப் பெரும்புலவர் கதிரை வேலர் விளங்கினார். அவர் அந்நாளில் சென்னை வெசுலி கல்லூரியில் தமிழ்ப்பணி புரிந்தார். அவர்தம் மாணவராக விளங்கியவர் திரு.வி.க.

.

அடிகளார்க்கும் கதிரைவேலர்க்கும் தனிப்பட்டவெறுப்போ காழ்ப்போ உண்டோ? இல்லை! அடிகளார் தம் 1-8-1903 நாட் குறிப்பில், “கதிரைவேற்பிள்ளை என் வீடு வந்து எனக்குத் தங்கள் கல் லூரியில் வேலை வாங்கித் தரவேண்டும் என்றார். நான் "உங்கள்பால் எனக்குச் சினமில்லை. அப்படியே செய்வேன் என்றேன்” என்று குறித்துள்ளமை அவர்கள் தனித் தொடர்பைக் குறிக்கும்! ஆனால் அருட்பாவைப் பற்றிய போரில் எதிர் எதிராக நின்றனர்.

வள்ளலார் பாடிய பாடல்கள் ‘அருட்பாவா மருட்பாவா' என்பதை முடிவு செய்வதற்கு, ஒரு பொது ஏற்பாடு செய்யப்பட்டது. அடிகளார் அருட்பாவின் பக்கலிலும், கதிரைவேலர் மருட்பாவின் பக்கலிலும் முறையுரைக்க முடிவு செய்தனர். முறைமன்ற நடுவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/202&oldid=1580159" இலிருந்து மீள்விக்கப்பட்டது