உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

மறைமலையம் – 11 11

ஒருவரும் அறிஞர் பெருமக்களும் பொதுமக்களும் 20-9-1903 ஆம் நாள் சிந்தாதிரிப்பேட்டையில் கூடினர். அடிகளார், 'வள்ளலார் பாக்கள் அருட்பாக்களே' என முன்வைத்து இசைத்துப் பாடியும் கருத்துநலம் கொழிக்கப் பேசியும் அமர்ந்தார்.

கதிரைவேலர் கொண்டலென முழங்க வல்லார். எனினும் அப்பொழுது கொண்ட கருத்தை விடுத்து வள்ளலாரைப் பழிப்பதே குறியாகிப் பொழிந்தார். தலைவர் உரை அடிகளார் உரையைச் சார்ந்து நின்றது! 'அருட்பாவே' என்னும் கருத்தே, அவையில் பொலிந்தும் விளங்கிற்று!

ஆனால், மறுநாள் ஓர் இதழில், கதிரைவேலர் தம் பக்கமே வெற்றி என ஓர் அறிக்கை விடுத்தார். அதனால் மீண்டும் அதே மேடையில் அவரவர் கருத்தை மீண்டும் நிலைநாட்டிப் பேசி ஒரு முடிவுக்கு வருமாறு இடை நின்றோர் ஏற்பாடு செய்தனர். அதன் படி 27-9-1903 ஆம் நாள் அவ் ஆய்வு நிகழ அடிகளார் மட்டுமே வந்தார்; கதிரைவேலர் வந்திலர். அடிகளார் அருட்பாச் சிறப்பினை வந்தோர் மனங்கொள எடுத்துரைத்து, ‘அருட்பாவே' என உறுதிப்படுத்தினார்.பின்னர் 18-10-1903இல் சென்னை வேணு கோபால் அரங்கில் ‘வழக்குரை காதை’ தொடர்வதாய் இருந்தது அன்றும், அடிகள் மட்டுமே மேடைக்கு வந்தார்; பொழிந்தார். அருட்பா வென்றது' என அவை பெருமுழக்கம் செய்தது! அவ் எதிராட்டு முடிந்தது எனப் பெருமக்கள் முடிவு செய்தனர்.ஆயினும் "அடைமழை விட்டும் செடிமழை விடவில்லை” என்பது போல், ஈராண்டுகள் கழித்தும் காஞ்சியிலும் திருச்சியிலும் கதிரைவேலர் மருட்பாக் கிளர்ச்சியைத் தூண்டினார். ஆங்கும் அடிகளார் முறையே 27-2-1905,1-7-1905 ஆகிய நாள்களில் சென்று மறுப்புரை பகர்ந்தமை பின்வரலாறாகும்.

66

சைவசித்தாந்த சமாசம் :

சிவநெறிப் பரப்பலுக்கு ஓர் அமைப்பை உருவாக்க அடிகள் விரும்பினார். அவ் விருப்பம் 7-7-1905 இல் திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகளின் முன்னர்ச் ‘சைவ சித்தாந்த சமாசம்’ என்னும் பெயரால் தோன்றியது. அடிகள், அதன் தலைமைச் செயலாளர். நாகை மதுரை நாயகம், வேலூர் அ. சிதம்பரம், கீழ்வேளூர் வி.சி. இராமலிங்கர் முதலியவர்கள் உறுப்பினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/203&oldid=1580160" இலிருந்து மீள்விக்கப்பட்டது