உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மலை

171

நாட்டில் சிவநெறி சார்ந்து விளங்கிய அமைப்புகளும், புதியனவுமாகக் கிளைகள் பல தோற்றமுற்றன.

சமாசத்தின் முதல் ஆண்டுவிழா 26-12-1906 ஆம் நாளிலும், இரண்டாம் ஆண்டுவிழா 1907 திசம்பர் 25, 26, 27 ஆகிய நாள்களிலும் சிதம்பரத்தில் நிகழ்ந்தன. இவ் விழாக்களுக்கு முறையே லங்கை 6 சர்பொன்னம்பலம் இராமநாதன் அவர்களும், மதுரைத் தமிழ்ச்சங்க நிறுவனர் பொன். பாண்டித்துரை அவர்களும் தலைமை தாங்கினர். மூன்றாம் ஆண்டுவிழா நாகை வெளிப்பாளையத்தில் 1906 திசம்பர் 25, 26, 27 ஆம் நாள்களில் செ.எம். நல்ல சாமி அவர்கள் தலைமையில் நிகழ்ந்தது.நான்காம் ஆண்டுவிழா 1909 திசம்பரில் இலங்கை சர். ஏ. கனகசபை அவர்கள் தலைமையில் திருச்சியில் நிகழ்ந்தது.1910 ஆம் ஆண்டு முதலே அடிகள் சமாசப் பிணைப்பில் இருந்து விலகித் தாம் விரும்பிய வண்ணம் சமயப் பணியும் பொதுப் பணியும் ஆற்றலானார். சமாசத்தில் க உண்ட ாகிய சில உட்பூசல்கள் அடிகளாருக்குப் பிடியாமையாலேயே இந்நிலை உண்டாயிற்று. எனினும், அவ்வப் போது சமாச விழாக்களில் மட்டும் கலந்துகொண்டு

பேருரையாற்றியுள்ளார்.

தலைமை

தாங்கிப்

கிறித்தவக் கல்லூரியில் அடிகள் 13 ஆண்டுகள் பணியாற் றினார். அக் காலத்தில் அண்ணாப்பிள்ளைத்தெரு, தண்டலம் பாலுசுந்தர முதலியார் தெரு, 26 முல்லா சாய்பு தெரு, 197, இலிங்கிச் செட்டித் தெரு, 62, அரண்மனைக்காரன் தெரு ஆகிய ஐந்திடங்களில் குடியிருந்தார்.

கற்பிக்கும் திறம் :

அடிகளார் பாடம் கற்பிக்கும் திறம் குறித்து மறை. திருநாவுக்கரசு வரைகின்றார்:

66

“அடிகள் கற்பிப்பு மிகவும் தெளிவாய் விரைந்தும் மெதுவுமான போக்கில் இல்லாமல் அளவான போக்கில் செல்லும்; விரைந்து பேசார்; இரைந்து ஒலியார்; பேச்சில் விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் கலந்தொலிக்கும்; விளக்க உரைகள் கண்ணாடியில் காணும் உருவம்போலத் தெளிவாய் இருக்கும்; அறிவு செறிந்திருக்கும்; இடை டையே நகைச்சுவையும் உலகியல் மேற்கோளும் உண்டு;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/204&oldid=1580161" இலிருந்து மீள்விக்கப்பட்டது