உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

  • மறைமலையம் – 11

11 ✰

பண்டை நூல்களின் மேற்கோள் உண்டு; சீரிய ஆராய்ச்சிகளும் கூரிய நோக்குகளும் உண்டு. சுருங்கச் சொன்னால் அடிகள் ஆசிரிய இயலின் உருவம் அனையார் என்றுதான் கூறவேண்டும்" என்பது அது.(மறைமலையடிகள் வரலாறு 24)

மாணவர்கள் :

நாவலர் ச. சோமசுந்தர பாரதியார், தணிகைமணி வ.சு. செங்கல்வராயர், திருப்புகழ்மணி டி.எம். கிருட்டிணசாமி, அமைச்சர் பி. சுப்பராயன், திவான்பகதூர் ஆர்.வி. கிருட்டிணர், இரசிகமணி டி.கே. சிதம்பர நாதர், பேராசிரியர் ச.வையாபுரியார். சி.என்.முத்துரங்கர், எசு. அனவரதவிநாயகர், சி.டி. நாயகம், கோவை இராமலிங்கம் ஆகியோர் அடிகளாரிடம் பயின்ற மாணவர்கள் ஆவர். இவர்களுள் சுப்பராயனும், முத்துரங்கரும் அடிகளாரிடம் சில ஆண்டுகள் தனிப் பாடமும் பயின்றவர் ஆவர். சிலச்சில நூல்களை மட்டும் பாடம் தனியே கேட்டுச் சென்றவரும், சில ஐயங்களை மட்டும் கேட்டுச் சென்றவரும் மிகப்பலர்.

ஆய்வு நூல் :

L

கல்லூரித் தமிழ்ப் பாடத்தில் ப்ழந்தமிழ் நூல்களும் இடம் பெற்றிருந்தன. அவ் வகையில் முல்லைப்பாட்டு, பட்டினப் பாலை என்பவை குறிப்பிடத்தக்கவை இப் பாடம் பற்றியும், உரைவந்த வகைபற்றியும், வெளியீடுபற்றியும் அடிகளார் முல்லைப்பாட்டு ஆய்வுரை மூன்றாம் பதிப்பு முகவுரையில் சுட்டுகிறார் : "இம் முல்லைப்பாட்டு கி.பி. 1903 ஆம் ஆண்டு கலைநூற் புலமைக்குப் பயிலும் மாணாக்கர்க்குப் பாடமாக வந்தது. சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் அப்போது யாம் இருந்து மாணாக்கர்க்குத் தமிழ்நூல் அறிவுறுத்தி வந்தமையால், இம்முல்லைப் பாட்டிற்கும் உரைவிரித்து உரைக்கலானோம். இச்செய்யுட்கு நச்சினார்க் கினியர் எழுதிய உரையையும் கூடவே விளக்கி வருகையில் செய்யுளியற்றிய ஆசிரியர் கொண்ட பொருண்முறை ஒரு பக்கமாகவும், உரைகாரர் கொண்ட பொருண் முறை மற்றொரு பக்கமாகவும் ஒன்றோடு ஒன்று இணங்காதாய் மாறுபட்டு நிற்றல் கண்டு மாணாக்கர் பெரிதும் இடர்ப்படுவார் ஆயினர்.

தமிழாசிரியராய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/205&oldid=1580162" இலிருந்து மீள்விக்கப்பட்டது