உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மலை

173

அதுவேயும் அன்றி, ஆக்கியோன் அமைத்த சொற்றொடர் நெறியைச் சிதைத்துச் சொற்களையும் அடைமொழிகளையும் ஒரு முறையுமின்றிப் பிரித்துக் கூட்டிப் பொருளுரைக்கும் நச்சினார்க் கினியருரை சிறிதும் ஏலா உரையேயாம் என்றும் அவர் கருதுவாராயினர். முன்னரே ஆக்கியோன் கருத்தை யொட்டி வேறோர் உரை செய்து வைத்திருந்தயாம் அதனை யெடுத்து அவர்க்கு விளக்கிக் காட்டினேமாக அது கண்டு அவரெல்லாம் ‘தமதுரை ஆக்கியோன் கருதிய பொருளை நேர்நின்று விளக்குவ தோடு பண்டைக் காலத்துத் தண்டமிழ்ச் சிறப்புகளைப் பின்றைக் காலத்துக் கேற்றபடி தெற்றென நன்கு தெரிப்பதாயும் இருத்தலின் தமது விரிந்த இவ்வாராய்ச்சி யுரையினையே பதிப்பிட்டு எமக்குத் தந்தருளல் வேண்டும்' எனக்கேட்டு அது பதிப்பித்தற்காம் செலவும் ஒருங்கு சேர்ந்து முன் உதவினர்.”

“கி.பி. 1906 ஆம் ஆண்டு கலைநூல் புலமைக்குப் பயிலும் மாணாக்கர்க்குப் பத்துப் பாட்டுகளில் ஒன்றான பட்டினப் பாலை என்னும் அருந்தமிழ்ச் செய்யுள் பாடமாய் வந்தது. யாம் முல்லைப் பாட்டிற்கெழுதிய ஆராய்ச்சியுரையினைப் பற்றிக் கேள்வியுற்ற அவ்வாண்டின் மாணாக்கர்களும் தமக்குப் பாடமாய் வந்த ‘பட்டினப்பாலைக்’கும் அதனைப் போலவே ஓர் ஆராய்ச்சியுரை எழுதித் தரும்படி வேண்டி, அதனைப் மதிப்பிடுதற்காம் செலவின் பொருட்டு தாமும் ஒருங்குசேர்ந்து பொருளுதவி செய்தனர்" என்கிறார். மாணவர் நலங்குறித்து வரையப்பட்ட இந் நூல்களின் உரைமாட்சி என்ன வகையில் உதவியது என்பதையும் அடிகளார் அவ்வுரையில் காட்டுகிறார்:

66

அவ்வுரை நூலை வாங்கிக் கற்ற மாணாக்கரும் ஏனைத் தமிழறிஞரும் புதுமுறையாக எழுதப்பட்ட அவ்வுரைப் பாங்கினைப் பெரிதும் வியந்து பாராட்டி அம்முறையினைப் பின்பற்றிப் பழைய தமிழ் நூல்களை ஆராய்வதில் கிளர்ச்சி பெறலானார். இப் புதுமுறையுரை தமிழ் நூலாராயும் வகைகளை இனிது விளக்கி அறிஞர் பலர்க்கும் அகமகிழ்ச்சியினை விளைத் தமை கண்டு இனி, இத்தகைய உரைகளையே எழுதுதல் வேண்டுமென எமதுள்ளம் பெரிதும் விழைந்தது” என்பது அது. அடிகளார் ஆய்வின் ஆழத்திற்கு ஒரு சான்று:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/206&oldid=1580163" இலிருந்து மீள்விக்கப்பட்டது