உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

66

மறைமலையம் – 11 11 ✰

"இப்பாட்டினுள் இடைச்சொற்களையும் வேற்றுமை உருபுகளையும் நீக்கி எண்ணப்பட்ட சொற்கள் சிறிதேறக் குறைய ஐந்நூறு சொற்களாகும். அவற்றுள் முன்வந்த சொல்லே பின்னும் வருமாயின் பின்வந்தது எண்ணப்படவில்லை. இவ் வைந்நூறு சொற்களுள் நேமி கோவலர், படிவம், கண்டம், படம், கணம், சிந்தித்து, விசயம், அஞ்சனம் என்னும் ஒன்பதும் வட சொற்கள், யவனர் மிலேச்சர் இரண்டும் திசைச் சொற்கள். ஆக இதனுட் காணப்பட்ட பிறமொழிச் சொற்கள் பதினொன்றேயாம். எனவே இப்பாட்டினுள் நூற்றுக்கு இரண்டு விழுக்காடு பிற சொற்கள் புகுந்தன என்றறிக, ஏனைய வெல்லாம் தனிச் செந்தமிழ்ச் சொற்களாகும்." இது முல்லைப்பாட்டின் சொல்லாய்வுக் கணக்கு

L

(பக்.56)

ப்பாட்டின்கண் சிறிதேறக் குறைய ஆயிரத்து முந்நூற்று அறுபத் தொன்பது சொற்கள் இருக்கின்றன. இவற்றுட் பதினொரு சொற்கள் வடசொற்களாம். அவை மகம், அங்கி, ஆவுதி, பூதம், மது, பலி, பதாகை அமரர், கங்கை, புண்ணியம்,சமம் என்பனவாம்.ஞமலி என்னும் ஒருசொல் பூழி நாட்டுக்குரிய திசைச் சொல்லாகும் ஆகவே, இப் பாட்டில் நூற்றுக்கு ஒன்று விழுக்காடு பிறநாட்டுச் சொற்கள் கலந்தன என்பது அறியற் பாற்று இதனால் இவ்வாசிரியர் காலத்தில் தமிழ் மிகவும் தூயதாக வழங்கப்பட்டு வந்ததென்பது புலப்படும் என்க” இது பட்டினப் பாலையின் சொல்லாய்வுக் கணக்கு (பக்.77).

மதுரைத் தமிழ்ச் சங்கம் :

முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை முதலாய பழைய நூல் களைத் தமிழ் மரபில் ஆய்ந்து புத்துரை காணும் அடிகளார் புலமை நலத்தை மதுரை நான்காம் தமிழ்ச் சங்க நிறுவனர். பொன். பாண்டித்துரையார் அறிந்தார். அதனால் அடிகளாரைத் தமிழ்ச்சங்க விழாக்களுக்கு அழைத்தார்.

மூன்றாம் ஆண்டுவிழாவில் (24-5-1904) சீரிய பொழிவாற்றி அடிகளார், அனைவரையும் கொள்ளை கொண்டார்; அவர்தம் தோற்றமும் பொழிவும் கவர்ச்சி மிக்கனவாகவயப்படுத்தின.அடுத்த ஆண்டும் நான்காம் விழாவுக்கு அடிகள் அழைக்கப்பட்டார்.அது 24-5-1905 இல் நிகழ்ந்தது. தலைமை தாங்கிய வி. கனகசபையார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/207&oldid=1580164" இலிருந்து மீள்விக்கப்பட்டது