உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

மறைமலையம் - 11 ✰

ஆக்கி முடித்தார். 13-6-1913 இல் தில்லி மாநகர்க்கு எய்தினார். இராமச்சந்திர வர்மா என்னும் பஞ்சாபியர்அடிகளை எதிர்பாராது வரவேற்றுப் போற்றினார். அவர் அடிகளை ஆக்ராவிற்கும் அழைத்துச் சென்று தாசுமால் அழகில் தோய உதவினர். அடிகள் 20-6-1913 இல் பம்பாய்க்குச் சென்று 11-7-1913 இல் சென்னைக்கு மீண்டார்.

ல்

அடிகளுக்கு 20-7-1913 இல் மயிலாப்பூர் இரானடே மண்டபத்தில் இராயப்பேட்டை அவையினரால் ஒரு பாராட்டு விழா எடுக்கப்பட்டது. அடிகள் தாம் சிவப் பணி செய்ததற்காகச் சென்ற செலவையும், கண்ட காட்சிகளையும் வடநாட்டவர் பண்புகளையும் விரிவாக மூன்று மணி நேரம் பொழிந்தார். ஈழநாட்டுச் செலவு :

தூத்துக்குடியில் வழுதூர் அழகிய சுந்தரர் என்பார் ஒருவர் இருந்தார்; அவர் சிவநெறிச் செல்வர்; தூத்துக் குடி சைவ சித்தாந்த சபையின் தொடர்புடையவர்; அவர் பேரன்பும் பெருமதிப்பும்

மறைமலையடிகளிடத்துப்

காண்டவர். அவர் வழியாக அடிகளார் பெருமையை அறிந்தார் இளைஞர் திருவரங்கனார்.

திருவரங்கனார் பாளையங்கோட்டை வயிரமுத்தர் சந்தரத்தம்மையார் மைந்தர். சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தைப் பின்னாளில் நிறுவியர்; தாமரைச் செல்வர் வ. சுப்பையா அவர்களுக்கு முன் தோன்றல்!

அரங்கர் கொழும்பில் ‘சிவசு’ என்னும் வணிகக் கூட்டு நிறுவனத்தில் பணி செய்து வந்தார். அவர்தம் இளந்தைப் பருவ நிலையை ஒரு பெரியவர் படமாகப் பிடித்துக் காட்டுகிறார்:

"நம் பேரன்பர் திருவரங்கம் பிள்ளை, அவர்கள் எடுத்த காரியத்தை முற்றுப்பெறச் செய்வதில் சலியா உழைப்பும் தளரா ஊக்கமும் அயரா ஆர்வமும் அஞ்சா நெஞ்சமும், தமிழ்ப்பற்றும் இறைவனிடத்தில் மாறாத அன்பும் கொண்டவர்கள். அவர்கள் நாள் ஒன்றுக்கு மூன்று மணி நேரம் மட்டும் தூங்கி, பாக்கி 21 மணி நேரமும் உழைத்து வந்த காலமும் உண்டு" என்கிறார். அப்படி உழைத்த காலத்தில்தான் அடிகளாரை அறிந்து அவரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/225&oldid=1580182" இலிருந்து மீள்விக்கப்பட்டது