உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மலை

191

வழிபட்டும் 4-4-1913 இல் கல்கத்தா நகரை அடைந்தார். ஆங்குப் பேலூர் மடம், தட்சிணேசுவரம் கோயில் ஆகியவற்றை வழிபட்டார். கல்கத்தாவில், 'திருஞானசம்பந்தர்' சாங்கியமும் சைவ சித்தாந்தமும் என்னும் பொருள்களைப்பற்றி முறையே தமிழிலும், ஆங்கிலத்திலும் சொற்பொழிவாற்றினார். அன்பர் களைக் கூட்டி அங்கே ‘சன்மார்க்க சபை ஒன்றையும் நிறுவினார். (4-5-1913) அதன்பின் தார்சிலிங்குக்குச் சென்றார்.

அடிகள் சென்ற நேரம் மாலைப்பொழுது; பனிமலை அடிப்பகுதி அது; குளிர்வாடை தாக்கத் தொடங்கியது. அடிகள் எதிர்பார்த்தவர் அங்கே எய்தினார் அல்லர்! என் செய்வார் திருவருளை நினைந்து நின்றார் அடிகள் நடுங்கும் நடுக்கத்தையும் எவரும் துணையில்லா நிலையையும் கண்டு அங்கு உலாவந்த ருவர் தம் உறைவிடத்திற்கு அடிகளை அழைத்துச் சென்றனர். பருவளமான மாளிகை நல்ல உணவு - வெதுப்பி ஏற்பாடு இனிய கலந்துரை பாடல் எல்லாமும் வாய்த்தன!

-

அவ்வில்லத்தவர் களும் அவர்கள் உறவினர்களும் அடிகளின் புலமை நலம் கண்டு மகிழ்ந்து வழிபட்டும் மெய்ப்பொருள்பற்றிக் கேட்டறிந்து பெருமகிழ்வுற்றனர்! அவர்கள் செய்த தொண்டும், ஆர்வ தளிர்ப்பும் வழிபாடும் அடிகளைத் ‘திருவருள் மாண்பு இஃது என உணருமாறு செய்தன.’

இரவு எய்தியது; தண்ணிலா வெண்ணிலா ஒளியை வாரி வழங்கியது; பனிமலை மேல் அவ் வெண்ணிலா அருவிப் பொழிவைக் கண்ணாடிப் பலகணி வழியே கண்டு கண்டு கழிபேருவகை எய்தினார் அடிகள். நெட்ட நெடுந்தொலைவில் திகழும் கயிலாயக் காட்சியில் தம்மை மறந்த இன்பத்தில் ஆழ்ந்தார். நான்கு நாள்கள் அவ்விடத்தே தங்கிக் காண்பன கண்டு மீண்டும் கல்கத்தா திரும்பினார். பின்னர்க் காசிக்குச் சென்று, கங்கை நீராடினார். பிரயாகைக்குச் சென்று முக்கூடலில் (கங்கை யமுனை) சரசுவதி என்னும் மூன்றாறுகளும் கூடும் திரிவேணி) நீராடினார். அரித்துவாரியில் பன்னிரு நாள்கள் தங்கினார். அதன்பின் பல்தேவ்சிங் என்பாரின் அன்பின் விருந்தாளராய்த் தேராதூனில் சில நாள்கள் தங்கினார். அங்கிருக்கும்போது 'உலகமதம்' என்னும் சொற்பொழிவை

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/224&oldid=1580181" இலிருந்து மீள்விக்கப்பட்டது