உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

11 ✰

மறைமலையம் – 11

அன்புமிக்க தி.சு. பாலசுந்தரன் என்னும் இளவழகற்குத் திருவருளால் எல்லா நலங்களும் உண்டாகுக எமது பெயரால் நீ ஒரு கல்விக்கழகம் வைத்து நடத்துவதைவிட தமிழன்னையின் பெயரினாலே அதனை நடத்துவதே சிறந்ததாகும். என்றாலும், எமது பெயரின் தொடர்பு அக்கழகத்திற்கு இருக்கவேண்டு மென்று நீ வற்புறுத்தி வேண்டுதலால் நின்னன்பின் பொருட்டு அவ்வாறு நீ செய்தற்கு இசைகின்றோம். இங்ஙனமாக நீ வைத்து நடத்தும் ‘மறை மலையடிகள் கல்விக்கழகம்' என்பதற்கு ‘எமது பெயரின் தொடர்பைத் தவிர வேறு ஏதொரு தொடர்பும் எமக்கும் இல்லை என்பதை இதனால் அறிவிக்கின்றேன். அதன் பொருட்டு நீ பிறரிடமிருந்து திரட்டும் பொருளும் இதனைச் செலவிடும் பொறுப்பும் எல்லாம் நினக்கே உரியன. நலம்.

6

அன்புள்ள, மறைமலையடிகள்

என மறுமொழி விடுத்தார். அழகரடிகளார் பேரன்பும், நம் அடிகளார் வாழ்வியல் தேர்ச்சியும்இவ்வஞ்சல்களால் புலப்படும். தக்கார்க்கு உதவும் உதவி எப்படியெல்லாம் நாட்டுப் பயனாம் என்பதனை நாட்டும் செய்தி ஆதலின் காட்டப் பெற்றதாம்! அடிகளார் அரவணைப்புத்தானே அழகரடிகளார் தொண்டுகள் அனைத்துக்கும் மூலவைப்பு? இவ்வாறு அடிகளார் தவமனை, தமிழ்க் கலைக்கழகமெனவும், சிவநெறி மன்றமெனவும் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் பலவற்றுக்கு ஈதொரு சான்று எனக்கொள்க.

வடநாட்டுச் செலவு :

அடிகளார் கட்டற்ற உரிமை வாழ்வால், கருதும் இடங்களுக்கெல்லாம் சென்று பொழிவாற்றவும், திருக்கோயில் வழிபாடாற்றவும் வாய்த்தது! தமிழகம் தழுவிய அளவில் அவர்கள் திருவுலாமுன்னரே நிகழ்ந்திருந்தாலும் வடநாட்டுச் செலவுக்குப் பேராசிரியப் பணி இடந்தந்திலது. அக்காலப் போக்குவரவு நிலையும் விரைந்து மீள்தற்கு வாய்ப்பிலதாய்த் தகைந்தது. அதனால், முழு விடுதலை பெற்ற அடிகள் நோக்கு வடபால் செலவை நாடிற்று.

21-3-1913 இல் சென்னையினின்றும் கிளர்ந்து விசயவாடா, தவளேசுவரம், பூரி, புவனேசுவரம் ஆகிய இடங்களைக் கண்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/223&oldid=1580180" இலிருந்து மீள்விக்கப்பட்டது