உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மலை

189

கடனறி காட்சி யவர்” (218)

“வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி

பண்பில் தலைப்பிரிதல் இன்று” (955)

என்னும் குறள்மணி வாழ்வு அடிகளார் வாழ்வாகும். அடிகளார் தந்த கலைவளம் என்ன செய்தது? வறியர் எனத் தள்ளாது வள்ளற்கலை வழங்கிய பேறு என்னவெல்லாம் செய்தது? மறைமலையடிகள் கல்விக் கழகம்! ஆயது! தனித்தமிழ்த் தொண்டுக்கும் சைவச் செந்நெறிக்கும் தம்மை முற்றாக ஆக்கிக் கொண்ட ‘அழகரடி’களைத் தந்தது.

கல்விக் கழகம் :

1930 இல் மறைமலையடிகள் கல்விக் கழகம் தொடங்கப் பட்டது. அதனைக் குறித்து எழுதுகின்றார் இளவழகனார் :

ஓம் சிவம்

திரு மறைமலையடி கள் துணை

அடிகள்பால் அடியேன் கல்வி பயின்ற நன்றியைத் தெரிவிக்கும் பொருட்டாகவும், அடிகள் நம் தமிழ்நாட்டுக்குச் செய்துள்ள அரும்பெரும் நன்மைகளை அனைவரும் என்றும் நினைவுகூர்தற் பொருட்டாகவும் உலகமெங்கும் வல்ல அறிஞர் கட்குப் பல அரும்பெரும் சிறப்புகள் அடையாள முகத்தாற் காணப்படுதல்போல, நமதினிய தமிழ்நாட்டிலும் அங்ஙனம் ஒரு சிறப்புக் காணப்படாக் குறையை நிரப்பும் பொருட்டாகவும் இக் கல்விக் கழகம் இவைகளின் இசைவின் மேல் அடிகள் திருப்பெயரை ஏற்று மறைமலையடிகள் கல்விக் கழகம் என்னும் பெயரால் சென்னையை அடுத்த பறங்கி மலையில் 1930 இல் அடியேனால் தொடங்கப்பெற்றது. இது தொடங்கப் பெற்று இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. இக்கழகம் நம் தமிழ்மொழிக்கும் முக்கியத்துக்கும் நாகரிக வாழ்க்கைக்கும் அடிகள் நோக்கங்களைப் பின்பற்றி உறுதொண்டு செய்யும் உறுதியுடைவர் என்பது அது. இதனைக் கண்ட அடிகளார்,

“ஓம் சிவம்” பல்லாவரம்

9-7-1932

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/222&oldid=1580179" இலிருந்து மீள்விக்கப்பட்டது