உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

  • மறைமலையம் – 11

11 ✰

"இதற்குள் உள்ளே இருந்து அம்மையார் வந்தார்கள். “யார் சாமி?”

6

“பாடம் கேட்க வேண்டுமாம்; சைதையில் இருப்பதால் கிழமைதோறும் வரமுடியுமாம்; சைவப்பிள்ளை; அடக்கமாய் இருக்கிறது; அறிவும் இருக்கிறது; எளிய குடும்பம், உரைகோளாளன் என்று நன்னூலில் சொல்லு வார்கள், அந்த வகையில் அமையலாம்; நம் திருக்கழுக் குன்றத்துப் பெருமானே தெய்வமாம்" அம்மையார்:

"நண்ணாப் படிப்பியா? நிலையா இருப்பியா?"

ஒன்றும் சொல்ல நாவெழாமல் ஊமைபோல் அடிகளைப் பார்த்தார். அம்மையார் பால் கொணர்ந்து தந்தார்; ‘அருளமுது' எனப் பருகினார்!

இக் காட்சி பாலசுந்தரம் ஆகிய இளவழகனார் அடிகளை முதற்கண் இல்லத்தில் கண்டகாட்சி!

அடிகள் வேலை என, வருவாய் என இருந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சியன்று. அத்தகு காலத்தினும் ஆர்வமிக்க ஏழைக்கு எக் கட்டணமும் இல்லாமல் விட்டிலே வைத்து ஊணும் உதவி எவர் கற்பிப்பார்? அடிகள் என்ன கொழுத்த செல்வரா? ஆலையோ வாணிகமோஈட்டித் தரும் பணத்தை எண்ணிப் பார்க்கவும் இயலா நிலையில் இருக்கும் செல்வச் செழிப்பரா? கைந்நிறையத் திங்கள் ஊதியம் வாங்கும் திருவாளரா? எதுவும் இல்லையே!

66

'நூல் விற்குமா? விற்ற தொகை ஏதாவது வருமா? இன்று என்ன செய்யலாம்? குடும்பம் பெரியது ஆயிற்றே! என்று நாளும் பொழுதும் தட்டுத்தடவும் குடும்பச் சூழலில் இப்படி உரை கோளாளனுக்கு (பாடம் விரும்பிக் கேட்பவனுக்கு) உதவ எவர் முன்வருவார்? மற்றைக் கல்விக்கூடங்களையும், தனிக்கல்வி கற்பிப்பாரையும் எண்ணிப் பார்க்கவே அடிகளின் தனிப் பெருமாண்பு புலப்படும்.

66

டனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/221&oldid=1580178" இலிருந்து மீள்விக்கப்பட்டது