உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மலை

187

“மதுராந்தகத்தில் பள்ளித் தமிழாசிரியர் குமரகுரு செட்டியார்; அவரிடம் பதினெண்கீழ்க் கணக்குகள் ஒவ்வோரரளவு படித்ததுண்டு; வீட்டில் நானே பெரும் பாலும் படித்துக்கொண்டேன்; சென்னையில் மயிலை சிவ. முத்துக்குமாரசாமி முதலியாரிடம் இரண்டு மாதங்கள் திருமுருகாற்றுப் படையில் ஒரு பகுதி படித்து வந்தேன்; அடிகளைப் பார்த்தது முதல் வேறு நினைவு ஓடவில்லை. நூல்களையே பார்த்து

வருகிறேன்.”

அடிகள்

“இலக்கணப் பயிற்சி?”

“தனியாக எதுவும் பாடம் கேட்டதில்லை"

“ஆங்கிலம்?”

“சில தொடர்கள் தெரியும்”

“உணவு எப்படி?”

66

‘சைதையில் உணவகத்தில் உண்கிறேன்; பயிற்சிக்குச் சிறு ஊதியம் உண்டு; தந்தையார்; ஊர்க்கணக்கர்; அவரால் என்னை இங்கே சேர்க்க மட்டும் முடிந்தது; அடிகளைக் காணும் நற்பேறும் அவரால் கிடைத்ததென்றுதான் சொல்லவேண்டும்; தாயார் மாணிக்கம்மமாள், இருவரும் சிவநேயர்கள்; திருக்கழுக்குன்றத்து இறைவரையே வழுத்துவார்கள்;

எந்நேரமும் என் தந்தையார் வேதகிரிநாதா

வேதகிரிநாதா என்றே சொல்லிக் கொண்டிருப்பார். எனக்குத் தமக்கை ஒருவரும் தம்பி ஒருவரும் தங்கை ஒருவரும் உண்டு. மரக்கறியே உண்டு பழக்கம்.”

"பயிற்சிப் பாடங்களில் தேர்ச்சி பெறவேண்டாமா? இங்கும் வந்துகொண்டிருந்தால் எப்படி?”

66

‘அவை எளிமையாய் இருக்கின்றன; வகுப்பிற் கேட்பதே போதும்”

“ஒரு திங்கட்கிழமை மாலையில் வா; நன்னூல் தொடங்கலாம்’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/220&oldid=1580177" இலிருந்து மீள்விக்கப்பட்டது