உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

-

மறைமலையம் – 11

அடிகளார் செயல்நிலை இன்னதெனத் தெரிந்தால், 'இன்ன நேரம் இது' எனத் திட்டமாகக் கூறலாம் என்பர். அத்தகு கடைப்பிடியர் அடிகள். இக் கடைப்பிடி ஒழுங்கும் தூய்மை போற்றலும் இயற்கை நாட்டமும் சுவைத் தேர்ச்சியும் உள்ளுள் ஊறிக் கிடந்து கிடந்து என்ன செய்தன! தமிழின் தனித் தன்மையை - தமிழின் தூய்மையை தமிழின் நடையழகை தமிழின் இயற்கை எழிலை - உலகம் கண்டுகொள்ளும் வகையில் தனித் தமிழ் இயக்கம் தோன்றப் பக்குவப்படுத்தின - பண்பட்ட இயல்வளம் ஆக்கின என்பதேயாம்.

ஒரு மாணவர் :

6

-

-

பல்லவ புரத்துப் பொதுநிலைக் கழகத் திருமாளிகையில் மாணவப் பேறு எய்த ஒருவர் செல்கின்றார். அடிகளாரின் அமர்ந்த கோலம் கண்ட அவர், திருப்பெருந்துறையில் குருந்த மர நிழலில் வீற்றிருந்த குருதேவரை மாணிக்கவாசகப் பெருமான் கண்டுகொண்ட முதல் நிலையில் அவர் இப்படித்தான் உள்ளம் நிலை கொள்ளாமல் தத்தளித் திருப்பாரோ” எனத் தத்தளித்தார்.

“யார்?” என்று ஒரு கீச்சொலி அடிகளிடமிருந்து எழுந்தது. கையுறையாகக் கொண்டு சென்ற இரண்டு நாரத்தைப் பழங்களையும் வைத்து வணங்கினார் சென்றவர்.

"எங்கிருந்து வருகிறாய்?"

66

‘சைதாப்பேட்டையில் இருந்து”

“என்ன செய்தி’

"இராயப்பேட்டைப் பேரவையில் பார்த்தேன்; ஓங்கார ளக்கம் கேட்டேன். இரண்டாம் நாளும் சைவ மாட்சி கேட்டேன். தமிழும் சைவமும் பயில விருப்பம் பெருகிவிட்டது

“பெயர் என்ன?”

66

"பாலசுந்தரம்; சைதையில் ஆசிரியர் பயிற்சியில் இருக்கிறேன். கிழமையில் இருமுறை வரக்கூடும்."

66

இது வரையில் என்னென்ன படித்திருக்கிறாய்?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/219&oldid=1580176" இலிருந்து மீள்விக்கப்பட்டது