உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மலை

185

ஆடையைக் காலை மாலை இருபோதும் மாற்றுவார் எண்ணெய் கலந்த சிற்றுண்டிகளைத் தொடமாட்டார். நெய்யே யாவற்றிற்கும் பயன்படல்வேண்டும் தாளிப்பதும் நெய்யிலேதான். கடுகு சேர்க்கமாட்டார். காப்பி, தேயிலை முதலிய குடிவகைகள் அவருக்கு வெறுப்பானவை. பசும்பாலும் நெய்யுமே அவருடைய செலவில் மிகுதியான பொருளைக் கவரும். இவ்வாறு தம் உட லைப் பேணும் வகையில் மிகவும் விழிப்பாகவே இருப்பார். தாம் சொற்பொழிவு செய்யப்போகும் இடங்களிலும் இவ் வகை உணவே வேண்டுமென முன்னரே எழுதிவிடுவார்.

அடிகளுக்கு நாட்குறிப்பு எழுதும் பழக்கம் உண்டு. ஒவ்வொரு நாளும் தம் நூல்நிலையத்தில் உள்ள நூல்களில் ஒரு பகுதியை எடுத்துத் தூசி தட்டிப் பிரித்துப் பார்த்து வைப்பது வழக்கம். தம் கைப்படவே கடிதங்கள் எழுதுவார். விளக்குகளைத் தாமே துடைத்து வைப்பார். கடிகாரத்திற்குச் சாவி கொடுப்பார். நாட்காட்டியில் நாள்களை மாற்றுவார். வீட்டில் தூசு தும்புகள் தோட்டத்தில் உதிர்ந்த சருகுகள் யாவும் அப்போதைக்கு அப்போதே நீக்கப்பெறல் வேண்டும். வீட்டில் உள்ள பொருள்கள் தத்தமக்குரிய இடங்களிலேயே இருத்தல் வேண்டும்” இவை புலவர் அரசு அவர்கள் அடிகளாரைப் படம் பிடித்துக் காட்டும் செய்திகள்.

இவற்றை மேலோட்டமாகப் பார்த்த அளவிலேயே அடிகள் திட்டமிட்டுத் தேர்ந்து செயலாற்ற வல்ல திருவாளர் என்பது விளங்கும்.

“பிற்பகல் 4 மணி இருக்கும்; பல்லாவரத்தில் அடிகளார் மாளிகைத் தோட்டத்தில் மெல்ல நுழைந்தேன்”

நல்ல காலம் போலும்! அடிகளார் தமது மாளிகையின் முன் தாழ்வாரத்தில் கட்டைச்சுவர்மேல் எதிர்முகமாகத் தனியாய் அமர்ந்திருந்தார். ஏதோ ஓய்வாகப் படித்துக் கொண்டிருந்தார். அத்தகைய அமர்த்தலான நிலையை இறுதிவரையில் அவர்கள் வாழ்க்கையில் நான் பார்த்ததே இல்லை; அடியேற்கு என்றே ஒருநாள் மட்டும் அவ்வாறு அமர்ந்திருத்தார்கள் போலும்!”

என்று அழகரடிகள் எழுதும் எழுத்தால் அடிகளாரின் ஒழுங்கு மாறா ஒரு சீர் நிலையை அறிந்து கொள்ளலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/218&oldid=1580175" இலிருந்து மீள்விக்கப்பட்டது