உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

மறைமலையம் – 11 11 ✰

11 மணிவரை காலைக் கடனும் நீராடுவதும் இறைவழிபாடும் நடைபெறும். பிறகு கஞ்சியுணவு கொள்வர். அவ்வுணவையும் ஆர அமர இருந்தும் சிறிது சிறிதாகப் பருகுவார். அதனுடன் பக்குவப்படுத்தப்பட்ட திராட்சை முதலிய பழவகைகளையும் சுவைத்துண்பார். இட்டலியும் சில நாளில் உணவாகும். காலைச் சிற்றுண்டி முடிந்ததும் அரைமணி நேரம் மறுபடியும் உலவுவார். பிறகு இருக்கையில் இருந்து நூலாய்வார், கடிதம் எழுதுவார்; நூல் எழுதுவார்.

L

அடிகளின் இருக்கையும் மேசையும் எழுதுகோலும் நூல்களும் தூயவைகளாக இருக்கு. எழுதுகோலும் நூல்களும் தமக்குரிய இடத்தைவிட்டு மாறியிருந்தது எப்போதும் இல்லை. மாளிகையின் கீழும் மேலும் தனித்தனியே மேசை நாற்காலி முதலிய படிக்கும் வசதிகள் உண்டு. ஓய்வாய் இருக்கும்போது சாய்ந்து படிக்கச் சாய்வு நாற்காலி பஞ்சணையுடன் உண்டு.

·

பகலுணவு 277, மணிக்குமேல் 3 மணிக்குள்ளாக நடைபெறும். இந்துப்பையே கறி முதலியவற்றில் சேர்த்துக் கொள்வார் மிளகாயும் புளியும் சேர்க்க மாட்டார். ஆங்கிலக் காய்கறியும் பட்டாணியும் கோசுக்கீரையும் பொன்னாங் கண்ணிக் கீரையும் மிளகு நீருமே அடிகட்கு விருப்பம். எலுமிச்சம் பழமே புளிக்கு மாறாகச் சேர்க்கப்படும். எலுமிச்சம்பழத் தொக்கு அடிகளுக்கு மிகவும் விருப்பமானது. உண்ண அரைமணி நேரம் ஆகும். உணவுக்குப்பின் சிறிது உறங்குவார். பிறகு நூல்களுக்கு உறையிடுதலும், ஆங்கில நூல்களின் ஓரம் பிரித்தலும் செய்வார். 6 மணிக்கு இஞ்சிநீர் பாலுடன் கலந்து பருகுவார். மறுபடியும் உலாவுவார். இறைவழிபாடு செய்வார். 8 மணி முதல் 10 மணிவரை எழுதுதலும் நூலாய்தலும் ஒழுங்காகச் செய்வார். பதினோரு மணிக்கு ‘எனிமா' வைத்துக்கொள்வார். வேது பிடிப்பார்.

இரவு ஒரு மணிக்கே சிற்றுண்டியும் பாலும் உண்பார். 2 மணிக்கே படுக்கைக்குச் செல்வார்.

காலையில் துயிலில் இருந்து எழுந்தவுடன் கண்ணாடியிலே தம் உருவத்தை நோக்கிக் கல்வி செல்வம் நலம் என்னும் மொழியைப் பன்முறை கூறுவார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/217&oldid=1580174" இலிருந்து மீள்விக்கப்பட்டது