உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

மறைமலையம் – 11 11 ✰

அக்சியந்திரம் வாங்கும் படி முன் முயற்சியும் காட்டிய அரும்பெருந் தகைமை எழுமை எழுபிறப்பும் மறக்கற்பாலன்று” என்று எழுதினார்.

அச்சகம் - நூலகம் :

பல்லவபுரம் சாவடித் தெருவில் மனைகட்டி வந்த அடிகளார் 19-5-1915 இல் அதில் குடி புகுந்தார். 1916 இல் அம் மாளிகையின் ஒரு பகுதியில் அச்சுக் கூடம் நிறுவினார். அதன் திறப்பு விழாவைத் திரு.வி.க. நிகழ்த்தினார். அம்பலவாணர் நூல் நிலையமும் உருக்கொண்டது.

1915, 1916 ஆகிய ஈராண்டுகளும் அடிகளார் அச்சிடல், நூலியற்றல், இதழ் வெளியிடல் ஆகியவற்றிலேயே முழுமையாக ஈடுபட்டிருந்தார். இவ்வாண்டிலேயே (1916) நாம் முதற்கண் கண்ட "தனித்தமிழ் இயக்கம்” தோற்றமுற்ற நிகழ்ச்சி நடந்ததாகும். இப்பொழுதுதான் ஞானசாகரத்தை ‘அறிவுக் கடல்’ என்றும், சமரச சன்மார்க்க சங்கத்தைப் பொதுநிலைக் கழகம், என்றும், தம் பெயரை ‘மறைமலையடிகள்”, என்றும் அடிகள் மாற்றி வைத்தார். ‘திருஞான சம்பந்தம்'. அறிவுத்தொடர் பாகவும் திரிபுர சுந்தரி முந்நகரழகியாகவும் பெயருற்றனர். இவை நீலாம்பிகை செய்ததாம்!

பெயர் மாற்றத்துடன் நின்றாரா அடிகளார். முன்னே அச்சிட்ட நூல்களின் மறுமதிப்புகள் வெளிப்படுந்தோறும் பிறமொழிச் சொற்களை விலக்கித் தனித் தமிழாக்கம் செய்தார்! இதனைக் காலமெல்லாம் தொடர்ந்தும் செய்தார். அடிகளாரின் வாழ்வுக்கும் மனைகட்டுதலுக்கும் அச்சகத்திற்கும் தொடர்ந்து உதவி வந்த அரங்கனார், அடிகளாரை மீண்டும் கொழும்புக்கு அழைத்தார். 21-5-1917 இல் கொழும்புக்குப் புறப்பட்ட அடிகளார் 28-9-1917 இல் மீண்டார். இவ்வுலகில் பல்வேறு உதவிகளுடன் உருபா 1797 - உம் நன்கொடையாகத் தண்டி உதவினார் அரங்கர். ஒரு பெரிய விழாவில் “நீவிர் நாயன்மார் அறுபத்து மூவரை அறிவீர்; அறுபத்து நான்காம் நாயனார் ஒருவருளர்; அவரே இத் திருவரங்கர்” என அடிகள் பாராட்டினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/227&oldid=1580184" இலிருந்து மீள்விக்கப்பட்டது