உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ்க் களஞ்சியம் :

தமிழ் மலை

195

திருவரங்கரின் கெழுதகை நண்பர் வி சங்கரநாராயணர் என்பார். தம் பெயரையும், அவர் பெயரையும் இணைத்துத் திரு. சங்கர் கம்பெனி என்னும் பெயரால் ஒரு புத்தக நிறுவனத்தை 1917 இல் நிறுவினார். மற்றையோர் நூல்களும் விற்கப் பெறுமாயினும் அடிகளார் நூல்களை விற்பதற்கெனவே அமைக்கப்பட்ட அமைப்பாகும் அது பின்னர் இவ்வமைப்பின் வழியாகவே வெளிப்பட்ட ‘செந்தமிழ்க்களஞ்சியம்' என்னும் திங்கள் வெளியீடு அடிகளாரின் திருவாசக விரிவுரை வெளியிடற்கென்றே எழுந்த தாகும். இவ்வாறெல்லாம் எண்ணி எண்ணி அடிகளார்க்கு உதவிய அரங்கர் ஒருநாள் பல்லவபுரத்தில் அடிகளார் இல்லத்தை எய்தினார் “அவரை வரவேற்று மகிழ்வதில் எங்கள் குடும்பம் அப்பரை வரவேற்ற அப்பூதி அடிகள் குடும்பத்தையும் விஞ்சி விட்டது” என்கிறார் மறை. திருநாவுக்கரசு! ஏனெனில் அவ் வரவேற்பு உறுப்பாளர்களுள் அவரும் ஒருவர் அல்லரோ!

அரங்கர் தாம் தொடங்கிய திருசங்கர்’ புத்தக

நிறுவனத்தைச் சென்னையில் நடத்த வேண்டும் என்றும், அதனைப் பற்றிப்பேசி அடிகளார் வாழ்த்துப்பெற வேண்டும் என்றும் கருதினார். அடிகளார் மனையில் சின்னாள்கள் தங்கினார். முன்னரே அரங்கரைப் பல்காலும் கேட்டிருந்த நீலாம்பிகையார் அன்புற்றார். அரங்கர் அவரைப் பார்த்து ஆர்வப் பெருக்குற்றார். நாள்கள் செலச்செல அது காதலாகக் கனிந்தது. 'இருவரும் மாறிப் புக்கனர்' என்னுமாறு காதலுறுதியாயிற்று!

அரங்கர் சென்னை பவழக்காரத் தெருவில் ‘திருசங்கர்’ குழுமத்தைத் தொடங்கினார். செந்தமிழ்க் களஞ்சியம் இதழும் தொடங்கப் பெற்றது. அடிகளாரின் திருவாசகக் கட்டுரையை அது தாங்கிற்று. உள்நாட்டுக் கையொப்பம் உருபா நான்கு வெளிநாட்டுக் கையொப்பம் உருபா ஆறு. உரைவளம் நல்கும் அடிகளார்க்கு ஓரிதழ்க்கு உருபா நூறு. இத் திட்டத்துடன் 1920 பெப்ருவரியில் முதல் இதழ் வெளிவந்தது.

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்:

அடிகளார்க்கு அன்பராக நெல்லையில் திரவியம் இருந்தார். அவர்க்கு அன்பர் விசுவநாதர் என்பார். அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/228&oldid=1580185" இலிருந்து மீள்விக்கப்பட்டது