உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

மறைமலையம் – 11 11 ✰

சிவனெறியும் செந்தமிழும் தழைக்கவேண்டும் என்பதில் பேரார்வம் கொண்டவர். தாம் சிவஞ்சார் குடியில் பிறந்ததும் தோல்பதனிடும் தொழிலக மேலாண்மைப் பொறுப்பில் இருக்க நேர்ந்ததை எண்ணி வருந்துவார். "நம் மக்கள் எத்தனையோ புதுப்புதுத் தொழில் முறைகளில் ஈடுபடுகின்றனர். எனினும், உயிர்க்கு ஊதியமாம் அறிவு நூல் வெளியீட்டுத் துறையில் ஈடுபடுவார் இலரே" என வருந்துவார். அவ் வருத்தம் திரவியனாரை அசைக்க, அவர் அடிகளாரை அணுக, அடி களார் அரங்கர்க்கு ஆற்றுப் படுத்தினார். அவ்வாற்றுப் படையில் பங்கு ஒன்றுக்கு உருபா பத்து விழுக்காடு 5,000 பங்குக்கு உருபா ஐம்பதாயிரத்தில் “திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட்” என்னும் பெயரால் 21-9-20 இல் திருநெல் வேலியில் பதிவு செய்யப்பெற்றது. திருவரங்கனாரும் திரவியனாரும் கூட்டமைச்சர் களாக இருந்து கழகத்தை நடத்தினர்.

L

கழகம் பதிவானபின் அரங்கனார் நெல்லையிலேயே தங்க நேர்ந்தது. அதனால் அவர் சென்னையில் நடத்தி வந்த ‘திருசங்கர் கம்பெனி' வணிகத்தைத் தொடர்ந்து நடத்தும் பொறுப்புக்கு அவர்தம் இளவல் வ.சு.வை அமர்த்தினார். அவ்விடத்திலேயே கழகக்கிளை நிலையமும் தொடங்கப்பட்டது. பின்னர்க் கழகத் தோடு 'திரு சங்கர் குழும்பும்’ இணைந்தது!

ஓரிடர் :

நல்லெண்ணத்தால் தொடங்கப்பட்ட நன்முயற்சிக்கும் எதிர் பாராத் தடை எதிரிடுதலும், உள்ளார்ந்த அன்பு உடையாரும் எதிரிட்டுக் கொண்டு நிற்கவும் வாழ்வில் நிகழ்தல் உண்டு. அத்தகு நிலை அடிகளார்க்கும் அரங்கர்க்கும் உண்டாயிற்று.

1920 பிப்ரவரி முதல் 1922 ஏப்பிரல் முடிய இருபத்தேழு மாதங்களில் 27 இதழ்கள் செந்தமிழ்க் களஞ்சியம் வெளிவந்திருக்க வேண்டும்! ஆனால் வெளிவர வாய்த்தவை 12 இதழ்களே! அதன் பின்னர் அறவே வெளிவரும் சூழலும் இல்லை! அரங்கரால் நிகழ்ந்ததா இது! இல்லை. அடிகளார் உரையல்லவோ இதழ்! அடிகளார் வழங்கினால் அல்லவோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/229&oldid=1580186" இலிருந்து மீள்விக்கப்பட்டது