உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

மறைமலையம் – 11 11 ✰

அகவையில் அப் பணி மேற்கொண்டார்.ஈராண்டுகளுக்குப் பின் அக் கல்லூரி மயிலாப்பூர் சாந்தோம் பகுதிக்குச் சென்றது. அங்கும் பணி மேற்கொண்டார் நீலாம்பிகையார். முன்னே ஓரளவு விடுப் பட்டிருந்த இருமல் பெருகியது; வேலையைத் துறந்து; பணியை விடுத்து வீட்டில் அமைந்தார்! 4இல் சென்னை இராயபுரத்தில், நார்த்விக் மகளிர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் தமிழாசிரியப் பணியை ஏற்றார். ஆங்கு நான்கு ஆண்டுகள் பணி செய்தார்.

L

ஆசிரியப் பணி ஏற்ற காலம் தொட்டே தக்க அவையில் பொழிவு செய்யும் கடமையை மேற்கொண்டார் நீலாம்பிகையார். பொழிவுக்கும் பயிற்றுதற்கும் முறையாக ஆய்வு மேற்கொண்டார். அவ்வாய்வு அவரை அழியா வாழிச் செல்வியராய் ஆக்கி வைத்தது. அக் காலத்தில் அவர் செய்த ஆய்வு நுணுக்கங்கள் பின்னே தனித்தமிழ்ச் செல்வங்களாக வெளிப்பட்டு அடிகளார் வழிமரபைப் புதுப்பித்தது.

அரங்கர் திருமணம் :

அடிகளார் மெல்லுள்ளம் கரைந்தது அரங்கர் அம்பிகை காதல் நோன்புக்கு உருகியது. “நீலா, உங்கள் மணத்தை யான் தடுக்கவில்லை; நம் வீட்டில் என் முன்னிலையில் உங்கள் திருமணம் நிகழ இயலாது. நீயும் காதலரும் வேறிடத்தில் திருமணத்தை நிகழ்த்திக் கொள்ளுங்கள்: யான் அதற்கு வரமாட்டேன்; ஆனால் தாயும் உடன் பிறந்தாரும் உங்கள் ன் திருமணத்தில் வைத்துக் கொள்ள வேண்டுவன வெல்லாம் செய்வேன். அணிகலன்களுக்கும் திருமணச் செலவுக்கும் பொறுப்பேற்றுக் கொள்வேன்" என்று பல்கால் வலியுறுத்தினார் இத்திட்டத்தை அறிவறிந்த அம்பிகை ஏற்பரோ? அரங்கர் ஏற்பரோ?

.

ஆண்டுகள் ஒன்றா இரண்டா ா கடந்தன? ஒன்பது ஆண்டுகள் கடந்தன. ஒருநாள் ஓராண்டாய், ஒன்பதாண்டாக உருண்டன! கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பதுபோல் அரங்கரின் உடன் பிறந்தாராகிய வ.சு. அவர்கள் அடிகளார்க்கு அணுக்கரானார்; அன்பரானார்; அரவணைப்பும் ஆனார். அடிகளார் உள்ளம், படிப்படியே மாறிவருவதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/231&oldid=1580188" இலிருந்து மீள்விக்கப்பட்டது