உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மலை

205

திகழ்ந்தார். அவர்தம் அருமைத் துணைவர் திருவரங்கனார் அத் தூய தமிழ்க்காதல் தொண்டாலேயே தம்மை இழந்து பின்னே நீலாம்பிகையார் காதலில் கட்டுண்டு கடிமணம் கொண்டவர் அல்லரோ! அதனால், அவர் அடிகளார் இயக்கத்திற்கு ஊன்றுகோலாய் அமைந்தார். சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடுகளாலும், ‘செந்தமிழ்ச் செல்வி' என்னும் இதழ் வழியாலும் பெருந்தொண்டு செய்தார். அவர் ஊன்று கோலாய் இருந்தார் என்னின், அவ்வியக்கத் தூணாக இருந்தவர் அவர்தம் தம்பியார் தாமரைச் செல்வர் வ. சுப்பையா அவர்களே ஆவர். எத்தனை எத்தனை அறிக்கைகள்! துண்டு வெளியீடுகள்! ஆசிரிய உரைகள்! இவற்றின்மேல் பாவாணர் எழுத்து அடிகளார் இயக்கத்திற்கு மாளிகை எழுப்பி மணிக்கூண்டும் அமைத்தது போன்ற L மாண்பினதாயிற்று. காலத்தில் தனித்தமிழ்க்கு இருந்த நிலையை ஓர் எடுத்துக்காட்டால்

காணலாம்.

அடிகளார்

24-7-1927 இல் கரந்தை தமிழ்ச் சங்க ஆண்டுவிழா. அவ் விழாவில் அடிகளார் தலைமையுரையாற்றினார். அடிகள் தம் உரையின் இடையே ஆ என்பது சிலருக்கு விளங்காது பசு என்றால் விளங்கும் ஆ என்பது தனித்தமிழ்ச் சொல். பசு என்பது வடசொல். தண்ணீர் என்று உரையாது நம் மக்களிற் பலர் ஜலம் என்கின்றனர் ஜலம் என்பது வடமொழி ஐயகோ! மலையாளிகள் கூட வெள்ளம் எனும் தனித்தமிழை வழங்கு கின்றனரே என்றார்.

அவ் விழாவில் அடிகளுக்கு முன்னர்ப் பெரும் புலவர்கள் நாவலர் ந. மு. வேங்கடசாமியார், பண்டிதமணி கதிரேசனார், கரந்தைக் கவியரசு, புரவலர் உமாமகேசுவரர் ஆகியோர் இருந்தனர். அவர்களுள் பண்டிதமணியார், "சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்” என்று அப்பர்கூட கூறியிருக்கிறாரே என்றார். உடனே அடிகளார், 'சலசல; என்ற ஓசையுடன் ஓடுதலின் சலம் என்பது காரணப்பெயர். அது தமிழ்ச் செய்யுள் ஒன்றிலும் கூறப்பட்டுள்ளதே! அது வடமொழிதான் என்று உறுதியானால் அதைவிட்டு நீர்’ என்னும் தனித்தமிழ்ச் சொல்லை ஆளலாமே. ஆ! ஆ! என் செய்வது! தனித்தமிழை இழிவென்று நினைப்பது முறையாகுமோ? தமிழிலே கடவுளை வணங்கக்கூடாது என்று கூறும் பார்ப்பனரும் உளர். பெரியோர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/238&oldid=1580195" இலிருந்து மீள்விக்கப்பட்டது