உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8)

9)

10)

204

மறைமலையம் – 11

ச்

நூல்களிற் கூறியிருப்பினும் வெறுக்கத் தக்க இச் செயல்களை நீக்குதல் வேண்டும். கைம் பெண் மணம் முற்காலத்திலும் இருந்திருப்பதாலும் நூல்களில் ஒப்புக் கொண்டிருப்பதாலும் அதனைச் செயன் முறைக்குக்

கொணர்தல் வேண்டும்.

சாதிக் கலப்பு மணம் வரவேற்கத் தக்கது.

தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களில் தமிழுக்குத் தலைமை தருதல் வேண்டும்.

தமிழைத் தனிப்பாடமாக பி.ஏ. ஆனர்சு வகுப்புக்கு ஏற்படுத்தல் வேண்டும்.

இவை பொதுநிலைக் கழக விழாவில் நிறைவேற்றப் பட்டன என்றால் இவற்றைக் கொணர்ந்தவர் எவர்? அடிகளாரே அல்லரோ! இக் கொள்கைகள்தாமே பொது நிலைக் கழகம் அஃதென்பதை வெளிப்படுத்த வல்லன வல்லவோ! சீர்திருத்தம் சீர்த்திருத்தம் எனக் கொடி கட்டிப் பறந்தார் சீர்திருத்தக் கொள்கைகளையெல்லாம் அடக்கமாக-அமைவாக-காட்டிய அடிகளார் ‘பெருநிலை' சிவநெறியர்க் கெல்லாம் உண்ட யிருந்தால், அச் சமயம் எத்தகு வழிகாட்டியாக அமைந்திருக்கும், அஃதில்லாமை.

66

"துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம்”

ாகி

என்னும் மறைமொழியைச் சொல்லுமாறே உள்ளது இவ்வாறு அமைந்ததே அடிகளார் தனித்தமிழ் இயக்கம் கண்டதும், இந்தி எதிர்ப்பில் தலைப்பட்டு நின்றதுமாம்!

ஒரு சொற்போர் :

தனித்தமிழ் இயக்கம் தோன்றிய சூழலை அறிந்துள்ளோம். அதனைப் பழுத்த புலமையாளர்களும் போற்றத் துணிய வில்லை. ‘தனித்து அமிழ்' என்று அத்தொடரைப் பிரித்து எள்ளியவர் களும் உண்டு. ஒரு புதுமை தோன்றும்போது, அதனை ஆய்ந்து அறிவாளர்கள் ஏற்றுப் போற்றத் தொடங்கினால், அது நாடு தழுவிய விளக்கமாய்த் திகழும். அவ் வகையில் அடிகளாரின் அருமை மகளார் நீலாம்பிகையார் தனிப்பெரும் பரப்பாளியாகத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/237&oldid=1580194" இலிருந்து மீள்விக்கப்பட்டது