உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மலை

203

மணி. திருநாவுக்கரசர் பொதுநிலைக்கழக அமைப்பும் நோக்கமும் பற்றி விளக்கியுரைத்தார். இளவழகனார் விரிவுரையாளர்களுக்கு வரவேற்பும், பொருளுதவி செய்தார்க்கு நன்றியும் கூறினார்; அடிகள் அப் பேரவையில் “அம்பலவாணர் திருக்கூத்தின் உண்மையும் ஞானயோகமும்” என்பது பற்றி உரையாற்றினார். பின்னர் இரண்டு நாள்கள் அறிஞர்கள் பலர் உரையாற்றினர். ஆக முப்பெரு விழாக்களும் மூன்று நாள் விழாக்களாகச் சிறந்தன. இவ்விழாப் பேரவையில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் அடிகளாரின் சீர்திருத்த நாட்டத்தைச் செவ்விதின் விளக்குவனவாம். அவை :

1)

2)

3)

4)

5)

6)

7)

மடத்துத் தலைவர்கள் எல்லாக் குலத்தவர்க்கும் வேற்றுமை இன்றிச் சமயச் சடங்குகள் கற்பிக்க முயற்சி செய்தல் வேண்டும்.

கோயில்களில் வேற்றுமையின்றித் திருநீறு முதலியன பெறவும் நிற்கவும் கோயில் தலைவர்கள் இடம் செய்தல் வேண்டும்;

பழந்தமிழ்க் குடிமக்கள் (தீண்டாதார்) எல்லோரையும் தூய்மையாகத் திருக்கோயில்களிற் சென்று வழி பாடாற்றப் பொதுமக்களும் கோயில் தலைவர்களும் இடம் தரல் வேண்டும்.

கோயில்களில் பொது மாதர் திருப்பணி செய்தல்

கூடாது.

வேண்டப்படாதனவும் பொருட்செலவு மிக்கனவும் சமய உண்மைக்கு முரண்பட்டனவும் அறிவுக்குப் பொருத்தம் அற்றனவும் ஆகிய திருவிழாக்களையும் சடங்குகளையும் திருக்கோயில்களிலே செய்தல் முற்றும் கூட ாது. தூயதும் வேண்டப்படுவதுமான சடங்குத் திருவிழாவும் குறைந்த செலவிலே செய்தல் வேண்டும். சாரதா சட்டத்தை உடனே செயன்முறைக்குக் கொணர்தல் வேண்டும்.

கைம்பெண்ணைத் தாலியறுத்தல், மொட்டையடித்தல், வெண்புடவையுடுத்தல், பட்டினி போடல் முதலியவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/236&oldid=1580193" இலிருந்து மீள்விக்கப்பட்டது