உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

மறைமலையம் – 11 11 *

எத்தகைய பல்கலைக் களஞ்சியமாகத் திகழ்ந்தார்! எத்தனை துறைகளைப் புதுக்கினார்! இவற்றைப் பட்டியலிட்டால் அதுவே ஒரு தனிப்பெரு நூலாதல் ஒருதலை. அவர் நடாத்திய பொது நிலைக்கழக இருபதாம் ஆண்டு விழா ஒன்றைமட்டும் சுட்டி அமைவாம்.

அடிகள் தம் வருவாய் கொண்டு அரிதில் தேடித் தொகுத்த நூல்கள் நாலாயிரம் ஆகும் அவை, தமிழ், வடமொழி, ஆங்கிலம் என்னும் மும்மொழி சார்ந்த நூல்களாம். அந்நூல்களை நூலகமாக அமைத்து ‘மணிமொழி நூல் நிலையம்' எனப் பெயரிட விரும்பினார்.

பொதுநிலைக் கழக விழா :

பொதுநிலைக் கழக மாளிகையின்மேல் இறைவழிபாட்டுக் கென அம்பலவாணர் திருக்கோயில் ஒன்றும் அமைத்தார். முறையே இவற்றின் திறப்பு விழாவும், குடமுழுக்கு விழாவும் பொதுநிலைக் கழக இருபதாம் ஆண்டு விழாவும் ஒருங்கே நடத்தத் திட்டப்படுத்தினார். அந்நாள் 1931 ஆம் ஆண்டு பெப்ரவரித் திங்கள் இரண்டாம் பக்கல் தைப்பூசத் திருநாள் ஆகும்.

அடிகள் நடாத்திய குடமுழுக்கு அவர்களாலேயே தமிழ்மறை ஓதிச் செய்யப்பட்டது ஆகும். விழாவுக்கு வந்திருந்தவர் அனைவரும் தாமே அம்பலவாணர் திருவடியில் மலரிட்டு வணங்கினர்; தாமே திருநீறு எடுத்து அணிந்து கொண்டனர். அம்பலவாணர் திருமுன் எவ்வகையான ஏற்றத்தாழ்வுமின்றி வழிபாடாற்ற அடிகள் செய்த ஏற்பாடு வள்ளலார் வழிபட்டதாகும்!

மணிமொழி

வழிபாட்டு நிகழ்ச்சி முடிந்தபின் நூல்நிலையம் திறக்கப்பெற்றது. அதன்பின் பொதுநிலைக்கழக விழாத் தொடங்கியது. தேவார திருவாசகங்கள் இன்னிசைக் கருவிகளுடன் ஓதப்பட்டன. அன்பர்கள் மகிழ்ச்சியின் இடையே அடிகள் அவைத் தலைமை பூண்டார்கள். அப்போது திருவாவடுதுறைத் திருமடத்துத் தலைவர் அடிகட்கு அனுப்பிய பொற்பட்டாடையும் பொற்பட்டுப் போர்வையும் மறைத்திரு. கருணானந்த அடிகள் சிறப்பித்துக் கொடுக்க, அடிகள் அவற்றை ஏற்றருளினார். சென்னைப் பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/235&oldid=1580192" இலிருந்து மீள்விக்கப்பட்டது