உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மலை

201

அருமை மகளை நினைத்து நெஞ்சம் நிலைகலங்குகின்றது. எமது கலக்கத்தை நன்கறியும் இறைவனே, அவட்கு இனி அந்நோய் வராமல் அருள் செய்து எமது பெருங்கவலையைத் தீர்க்கற்பாலான்.

நீலா, தலைமுழுகும் நாள்களில், உடைத்து விதை அகற்றிய நான்கு கடுக்காய், ஏழு கசப்பில்லாத வாதுமைப் பருப்புகளின் எடையுள்ள மிளகு, இம்மிளகின் எடையில் அரைவாசி கொண்ட ஓமம் என்னும் இவற்றை நெகிழ அரைத்து வடிகஞ்சியிற் குழப்பி, இறுகக் காய்ச்சி, சூட்டோடு அதனைத் தலையிலும் உடம்பிலும் தேய்த்துக் கொண்டு அளவான வெந்நீரில் முடிக்காய் சவற்காரத் தால் நெய்ச்சிக்கும் அழுக்கும் போக முழுகுதல் வேண்டும்.

தேனும் இந்துப்புப் பொடி சிறிதும் கலந்த இஞ்சிச் சாற்றை அகமும் புறமும் தூயவாய்ப் பளபளப்பாக்கிய குடகு நாரத்தை நிறக் கண்ணாடிப் புட்டிலிலும் ஆழ்ந்த நீலக் கண்ணாடிப் புட்டிலிலும் அடைப்பித்து, வெயிலில் நாள் முழுதும் வைத்த படியாகவே அதனை உட்கொண்டு வரல் வேண்டும். நோய் மிகுந்தில்லா நாள்களில் மூன்று மணி நேரத்திற்கு ஒருகால் குடகு நாரத்தை நிறப்புட்டிலின் சாற்றையும் இடையே ஒன்றல்லது இரண்டு முறை ஆழ்ந்த நீலப்புடிலின் சாற்றையும் மாற்றி மாற்றிக் காற்பலம் பருகிவரல் வேண்டும். தலை முழுகிய மறு நாளில் ஐந்து விதை நீக்கிய கடுக்காய்ச்சாறு அருந்திமலக்குடரைத் துப்புரவு செய்க. உடம்பு இடுங்கச்சுகள் முழங்கைக்கு மேல் நீளமாய் இறுகப்பிடித்திருத்தல் வேண்டும். குளிர்ச்சி மிகுந்த பண்டங்களை உட்கொள்ளல் வேண்டாம்.

நலம்.

அன்புமிக்க, மறைமலையடிகள்.

அடிகள், அடிகளாய், தாயாய் தந்தையாய் குருவாய் மருத்துவராய் பல்லுருக்காட்டி நிற்கும் பாங்கு இக் கடிதம் ஒன்றால் வெளிப்பட விளங்குமே!

அடிகளார் எத்தனை எத்தனை தலைப்புகளில் எங்கெங் கெல்லாம் பொழிந்தார்! எவ்வெவ்வூர்களுக்கு எல்லாம் சென்றார்! எவ்வெவரோடும் எல்லாம் தொடர்பாளராய்த் துலங்கினார்! எவர்க்கெல்லாம் வழிகாட்டியாய் இலங்கினார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/234&oldid=1580191" இலிருந்து மீள்விக்கப்பட்டது