உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

11 ✰

  • மறைமலையம் – 11

அருமை அத்தையாரும் அன்னையும் புதல்வியும் போல் அத்துணை யன்புடன் அளவளாவுதலை அறிந் அறிந்தெழுந்த பெருமகிழ்ச்சியால் எம்பெருமானை வாழ்த்தியும் வணங்கியும் எம் புல்லிய நன்றியைச் செலுத்தினேம்.

யாம் கற்ற பண்டைத் தனிச் செந்தமிழ் அகப்பொருள் இலக்கணத்திற்குக் கண்கண்ட இலக்கியமாய் நீவிர் இருவீரும் இருதலைப் புள்ளின் ஓர் உயிரினராய்த், ‘தோகைக்கும் தோன்றற்கும் ஒன்றாய் வரும் இன்ப துன்பங்களே' என்று திருச்சிற்றம்பலக் கோவையாரில் மாணிக்கவாசகப் பெருமான் அருளிச் செய்தாங்கு, இன்ப துன்பங்களிலும் ஒருவரை யொருவர் இன்றியமையாக் காதல் அன்பில் தலைப்பிரியா வாழ்க்கையினில் நீவிர்நீடுவாழுமாறு அருள் புரிந்த

று

அம்மையப்பர் தம் பேரிரக்த்திற்கு ஏழையேம் எங்ஙனம் கைம்மா செலுத்த வல்லேம். அவ்வருட் பெருந்திறத்தை எங்ஙனம் ஏத்திப் புகழ வல்லேம்.காதல் அன்பின்கண் ஈடுபட்ட நும் இல்லற இன்ப வாழ்க்கை அம்மையப்பர் தம் அருள் வாழ்க்கையில் வேறாகுவது அன்றாகலின் இவ் வாழ்க்கையிலேயே நும் வாழ்நாள் எல்லா நலங்களிலும் இனிது நீடுக என்று எம்பெருமான் பெருமாட்டியின் இணைமலர்த் திருவடிகளை இறைஞ்சி வேண்டுகின்றேம்.

எம்முடைய வாழ்க்கையினும் யாம் ஈன்ற எம் மக்களின் இல்வற வாழ்க்கை முற்றும் அன்பிற் பிரிதல் இல்லர் இன்பச் சுற்றத்தவரோடு இனிது நடைபெறுக என்று யாம் வேண்டிய வேண்டுகோள் உரையினை எம் இறைவன் திருச்செவி பெற்று நீலாள். கணவனுடன் அவள்தன் அருமை அத்தையாரும், அருமை மைத்துனரும், ஏவலாளரும், ஏவலாட்டியும் பிறரும் எல்லாம் அன்பிற்கெழுவிய நன்பெரு மாட்சியினை அருள் செய்தான்! அவ்வருளுக்கு எளியரேம் எழுமை எழு பிறப்பும் உழுவற்றொழும்பு ஆற்றுவதல்லது வேறென் கடவேம்!

தன் மனக்கினிய காதலன்பாள் நீலாளை ஒப்படைத்து விட்டபின் யான் கவலையுறுதற்கு இடனில்லையாயினும், அவட்கு வந்த நோய் இனி வாராதென்னும் உறுதிப்பாடு பெற்ற பின்னரே என்னுள்ளம் அமைதி பெறும். நெடுந்தொலைவில் இருப்பதனாலும் அடுத்தடுத்துக் காணுதற்கு இல்லாமையாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/233&oldid=1580190" இலிருந்து மீள்விக்கப்பட்டது