உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

❖ - 11❖ மறைமலையம் – 11

உரையும் பாட்டும் :

7. தேனருவி

அடிகளார் தமிழ் தனித்தமிழ்! ஆம்! தூய அருவித் தமிழ்! தேனருவித்தமிழ்! அவர் கை தேன் தமிழ் எழுத்தைத் தீட்டியது! அவர்வாய் தேன் தமிழ்ச் சொல்லைப் பொழிந்தது! சொல்லியதை எழுதுதல், எழுதியதைச் சொல்லுதல் என்னும் இரண்டும் அடிகளார் நன்முறையும் பொழிவு முறையுமாம். அத் தேனருவி நடைக்கும் கருத்துக்கும் சிதறல் போலச் சிலச்சில சான்றுகள்:

“பால் கறந்த மாத்திரையே உண்பார்க்குச் சுவை பயக்கு மாயினும், அதனை வற்றக் காய்ச்சிக் கட்டியாகத் திரட்டிப் பின்னுண்பார்க்குக் கழிபெருஞ்சுவை தருதல் போலவும், முற்றின கருப்பங்கழியை நறுக்கிப் பிழிந்த மாத்திரையே அதன் சாற்றைப் பருகுவார்க்கு அஃதினிமை விளைக்குமாயினும், மேலும் அதனைப் பாகுதிரளக் காய்ச்சிச் சருக்கரைக் கட்டியாக எடுத்துண்பார்க்கு ஆற்றவும் பேரினிமை பயத்தல் போலவும் உரையும் நலம் பயப்பதொன்றே ஆயினும் அதனைக் காட்டினும் செய்யுளாற் பெறப்படும் பயன் சாலவும் பெரிதாம்”

பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை-7.

மக்கள் வாழ்நாள் என்கின்ற நீரோடையிலே வறுநினைவு களான கலங்கற் பெருநீர் பெருகிச் செல்லும் போது. உலக இயற்கை என்னும் மலைக்குகைகளிலே, அரித்து எடுத்து வந்த அருங்கருத்துகளான பொற்றுகள், இடை இடை டையே ஆழ்ந்து அவ்வோடையின் அடிநிலத்தில் சிதர்ந்து மின்னிக்கிடப்ப, நல்லிசைப் புலவன் என்னும் அரிப்புக்காரன் மிக விழைந்து முயன்று அப் பொற்சிதர்களையெல்லாம் ஒன்றாகப் பொறுக்கி எடுத்துத், தன் மதிநுட்ப நெருப்பில் இட்டு, உருக்கிப் பசும்பொற் பிண்டமாகத் திரட்டித் தருவதே, பாட்டு என்று அறிதல் வேண்டும்.- முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை - 5.

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/245&oldid=1580202" இலிருந்து மீள்விக்கப்பட்டது