உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

மறைமலையம் – 11 11 ✰

பண்டை மக்கள் விலங்குகளுக்கு அஞ்சிக் கீழே இருக்க டம் பெறாதபோது நீண்டுயர்ந்த மரங்களின் மேற்பருத்த கிளை களிற் குடிசைகள் கட்டி அவற்றின்கண் இருந்து உயிர் வாழ்ந்தனர். அவர்கள் அக் குடிசைகளில் இருந்து கீழ் இறங்கவும் திரும்பவும் மேலேறவும் நூலேணி அமைத்துக் கொள்ளத் தெரிந்திருந்தனர். இத்தகைய வாழ்க்கையில் இருந்த ஒருவனைக் குறிஞ்சிப்பாட்டின் ஆசிரியர் சேணோன் என நுவல்கின்றார்.

காட்சிப் பொருத்தம் :

6

இளைஞர்க்கான இன்றமிழ் -174.

6

முருகப்பிரானுக்குக் கோழிக் கொடியொன்றுள தெனக் கூறுதல் என்னை எனின், விடியற் காலையிற் றோன்றும் ஞாயிற்றின்கண் முளைத்து விளங்கும் இறைவனே முருகன் எனப்பட்டான். அவ் விடியற் காலையில் ஞாயிறு கீழ்பால் எழுகின்ற நேரத்தில் கோழி கூவுதலை எவரும் அறிவர். இங்ஙனம் இறைவனது வருகையைப் புலரிக் காலையில் முன்னறிவிக்கும் இயைபு பற்றி அக்கோழியின் உருவானது அவன்றன் கொடிக்கண் உளதாக வைத்து இயைபுபட்டது.

நம்மவர் பேச்சு :

- கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா - 112.

நாலுபேர் ஒன்று சேர்வார்களானால், சாதிப்பேச்சும்; பெண் கொடுக்கல் வாங்கலைப் பற்றிய பேச்சும்; அவன் சாதி கெட்டவன்,அவனுக்கும் நமக்கும் உறவு கிடையாது, எங்கள் சாதி உயர்ந்தது, எங்கள் சாதியில் ஒடித்தாற் பால் வடியும், எங்களிற் பத்துவீட்டுக்காரரோடு தாம் நாங்கள் கலப்பது வழக்கம், மற்றவர் கையில் தண்ணீர்கூட வாங்கமாட்டோம் என்னும் பேச்சும்; அதைவிட்டால் பொருள்தேடும் வகைகளைப்பற்றியே பேச்சும்; அதுவும் விட்டால் தமக்குப் பொருள் சேருங்காலத்தைப்பற்றியும், நோய் தீரும் நேரத்தைப் பற்றியும், மணம் ஆகும் நாளைப்பற்றியும், எந்த இடத்திற் போனாற் குறி கேட்கலாம்? எந்தத் தெய்வத்துக்கு ஆடு கோழி அறுத்தால் இவைகூடும்? மாரியைக் கும்பிடலாமா? மதுரை வீரனைக் கும்பிடலாமா? காளியைக் கும்பிடலாமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/247&oldid=1580204" இலிருந்து மீள்விக்கப்பட்டது