உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மலை

215

கறுப்பண்ணனைக் கும்பிடலாமா? எசக்கியைக் கும்பிடலாமா? சுடலைமாடனைக் கும்பிடலாமா? என்னும் சிறு தெய்வச் சிற்றுயிர்க் கொலைக் கொடும் பேச்சும்: தனக்குப் பகையான வனைப் பல வகையால் இழித்துத் தன்னைப் பல வகையால் உயர்த்திச் செருக்கிப் பேசும் பேச்சுமே எங்கும் எல்லாரும் பேசக் காண்கிறோம்! புகை வண்டிகளிலும் - இந்தப் பேச்சே! பொதுக் கூட்டங்களிலும் இந்தப் பேச்சே, கோயில்களிலும் இந்தப் பேச்சே, குளக்கரையிலும் இந்தப் பேச்சே.

ஒருமுகப்பாடு :

-

அறிவுரைக் கொத்து 119-120

ஒரு மாணாக்கன் கணக்கு நூல் பயிலும்போது அதிற் சொல்லப்பட்ட கணக்கு வகைகளிற் கருத்தை அழுந்தவையாமல், தான் விளையாடப்போம் இடத்தையும் தன் நேசரையும் தின்பண்டங்களையும் எண்ணிக் கொண்டே அதனைப் பார்ப் பானானால் அக் கணக்கின் வகைகள் அவற்குச் சிறிதும் புலப் படாமற்போகும். போக மனச்சோர்வடைந்து ‘எத்தனை முறை பயின்றாலும் இக் கணக்குகள் என் மண்டையில் ஏற வில்லையே' என்று புத்தகத்தை வீசி எறிந்து விட்டுப் போய் விடுகிறான்.

அவன் அக் கணக்கு நூலைக் கையில் எடுத்தவுடனே தன் ை ளயாட்டுத் தொழில்கள் எல்லாவற்றையும் முற்றும் மறந்து விட்டு எடுத்த பாடத்திலே அறிவை நாட்டுவானானால் எவ்வளவு விரைவில் அவன் அதன் பொருள்களைச் செவ்வையாகத் தெரிந்து தேர்ச்சி பெறுவான்

-

மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி 19.

“மன அமைதி இன்மையைப் புத்தகங்களைப் படிப்பதால் போக்கிக் கொள்வேன்”

66

இன்று பகல் முழுதும் ஓய்வாக இருந்தேன். ஆனால் எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும் படித்துக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருக்கவே விரும்புகிறேன். நாம் இன்புறுவதற்கும் மெய்யறிவு பெறுதற்கும் அல்லாமல் தம்மைச் சார்ந்த மக்கள் அறிவுபெறச் செய்தற்கும் அவர்கள் சிறப்புற வாழ்தற்கும் படியாமல் எதற்காக வறிதே ஓய்வாக இருப்பது

""

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/248&oldid=1580205" இலிருந்து மீள்விக்கப்பட்டது