உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மலை

227

அடிகள் பேச்சு பல பேச்சாளரைப் படைத்தது; எழுத்து பல எழுத்தாளரை ஈன்றது; நூல் பல நூல் ஆ ஆசிரியன்மாரை அளித்தது. அடிகளே தென்னாடு; தென்னாடே அடிகள் என்று கூறல் மிகையாகாது.

66

- திரு.வி.க. மறைமலையடிகள் மாண்பு. முன்னுரை

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற புலவர்

- கா. சுப்பிரமணியனார்.

·

தேனும் பாலும் போன்ற தூய தீந்தமிழ்ச் சொற்களால் உரை நடையும் செய்யுளுமாகிய இருவடிவிலும் பல்துறை தழுவி ஐம்பதிற்கு மேற்பட்ட அருநூலியற்றி முதலிரு கழக நிலைக்குத் தமிழைப் புதுக்கி அதற்குப் புத்துயிர் அளித்தவர் மாநிலத்தில் மக்கள் உள்ளவரை புகழ்பெற்ற

மறைமலையடிகளே.

மறையாப்

-பாவாணர் : வடமொழி வரலாறு முன்னுரை.

பொதுத் தமிழ் இலக்கியம் அனைத்தும் பொருந்தக் கற்று ஆங்கிலரும் வியக்கும் அழகிய ஆங்கில நடை கை வரப்பெற்று, ஆரிய மறைகளையும் ஆழ்ந்து ஆராய்தலுற்று, கடந்த மூவாயிரம் ஆண்டாக மறைந்து கிடந்த தனித்தமிழை மீட்டு எப்பொருள் பற்றியும் செந்தமிழில் எழுதவொண்ணும் என்னும் உண்மையை நாட்டிய மறைமலை அடிகள் திருவள்ளுவர்க்கு அடுத்தபடியாக வைத்து எண்ணத் தக்க தனிப்பெரும் தகுதியுடையவர் ஆவர்

- பாவாணர்; தமிழிலக்கிய வரலாறு. பக், 232 மறைமலையடிகளின் தனித்தமிழ் இயக்கம் தமிழ்த் தாயின் நெஞ்சு புரையோடாதும் தமிழர் அறை போகாதும் காத்த. தமிழன் வயிற்றில் இருந்து முன்பு பல திராவிட மொழியில் கிளைத்து அதன் பரப்பைச் சுருக்கியதுபோல, மீண்டும் தமிழகத்துள் ஒரு புதிய திராவிட மொழி பிறந்து தமிழை இன்னும் குன்றிக் குலையாதவாறு தடுத்தது.இன்று பாடநூல்கள் பெரும்பாலும் தமிழ் வடிவாக வருகின்றன. ஒருசார் இளைஞர் வட்டம், எழுத்தாளர் கூட்டம் குடிநீரைத் தூயநீராகக் காத்தல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/260&oldid=1580217" இலிருந்து மீள்விக்கப்பட்டது